பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

211


 
இந்திய அரசு, தன் நாட்டு மக்கள்
மீதே போர் தொடுக்கிறது!


ந்திய அரசு, தன் நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் உண்மையான உரிமை எழுச்சிகளை அடக்கவும், ஒடுக்கவும். முறியடிக்கவும் அதில் அவர்களை வெற்றி கொள்ளவும், போர் முயற்சிகளைக் கடுமையான கொடுமையான கருப்புச் சட்டங்கள் வழியாகவும், போர், படைத்துறைகளை ஏவிவிட்டும், காவல் துறையைக் கட்டவிழ்த்து விட்டும், மக்களை அடித்தும், நொறுக்கியும், வன்கொடுமைச் சிறையிலிட்டும், சுட்டுப் பொசுக்கியும் அழித்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கொடுமையானது அரக்கத்தனமானது; குடியரசு கோட்பாட்டுக்கே முரணானது; அம் முறைக்கே உலைவைப்பது.

ஒப்போலை முறையில், அதுவும் பண மூட்டைகளையும், படை, காவல் துறைகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கவர்ச்சியால் உறுதி மொழிகளால் ஏமாற்றியும் விளம்பரங்களால் ஏமாற்றியும் அவை செல்லுபடியாகாத விடத்தில் மக்களை மிரட்டியும் கொடுமைப்படுத்தியும் தில்லுமுல்லுகள் செய்தும் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு மக்களின் உரிமைக் குரல்வளைகளைத் நெரிக்கும் வகையில், அவர்களைக் கொடுங்கோல் முறைகளில் அடக்கி யாண்டு வருகிறது நடுவண் அரசு எனப்படும் இந்திராப் பேராய ஆட்சி!

இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகளாகியும் இங்குள்ள பெரும்பான்மை மக்களைப் பட்டினி போட்டும் வாழ்வதற்குரிய