பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வேண்டும் விடுதலை

என்பதற்கிணங்க, மூங்கை நாடாகமாடிக் கொண்டு வீணான சாரவுணவுத் திட்டத்திலும், சாராயக் கிடங்குகளிலும் திரைப்படக் கூத்தாட்டங்களிலுமே சிற்தனையைப் பேரக்கி, எதிர்கால மக்கள் நலத்திட்டம் என்ற எண்ணமே இல்லாமல், அவ்வப்பொழுதைய ஆரவாரத்திற்கும், கொள்ளையடிப்புகளுக்கும் தக்கவாறு, வடநாட்டு அரசியல் வல்லாண்மைக்காரர்களிடமும், சுரண்டல் முதலாளிகளிடமும் பேரம்பேசி, ஊதியத்தில் பங்கு போட்டுக் கொண்டு சாப்பசி தணிக்கும் சதுர ஆட்டக் காரர்களின் பெரியாரிச, அண்ணாயிசக் கொள்கைத் திராவிடர்களுக்கோ, தமிழ் நலத்திலும் ஊற்றமில்லை; தமிழர் முன்னேற்றத்திலும் நாட்டமில்லை. அவர்கள் நினைப்பவையெல்லாம் இன்றைக்குக் கட்டி நாளைக்குச் சரிந்து போகும் வெற்றாரவார வீணடிப்புத் திட்டங்களே! முதலமைச்சருக் கேற்ற துறையமைச்சர்கள்! துறையமைச்சர்களுக்கேற்ற முதலமைச்சர்! கடந்த ஈராயிரம் மூவாயிரமாண்டுகளாக விழுந்து கிடக்கும் இத் தமிழினம் இந்தச் சாராய வருமானத்திலா தலைதூக்கப் போகிறது? இவர்கள் நடத்தும் பரிசுச்சீட்டுத் திட்டத்திலா, முட்டுக்கொடுத்து நிறுத்தப் பட்டுவிடப் போகிறது.?

வரலாற்றை யுணராத வாய்வீச்சுகள்! அறிஞர்களை மதிக்காத ஆராவாரப் பேச்சுகள்! வெறும் வாய்ப்புரளிக்காரர்களுக்கு வாய்க்கரிசி போட்டு, வீக்கத்தை ஆக்கம் என்றும் விழுந்தெழுவதை நடிப்பு என்றும், கெக்கலிப்பைக் கலையென்றும், கேடுகளை நலன்கள் என்றும் வெட்கங்கெட்ட விளம்பரங்களால் ஆட்சி வண்டி யோட்டிக் கொண்டிருக்கும், இவ் வாளுங்கட்சித் திராவிடங்களால், இவ்வேதுங்கெட்ட தமிழினத்திற்கு ஏதாவது உண்மையிலேயே முன்னேற்றம் ஏற்படுமா? அந்த மூகாம்பிகைக்கே வெளிச்சம்! மொழியின் அழிவைத் தடுக்கவும் அதனை வளர்த்தெடுக்கவும் வாய்ப்பை உருவாக்காத இவர்கள், அதனைச் சீர்திருத்தும் முயற்சிகளென ஏராளமான கோணல் மாணலான முயற்சிகளைச் செய்வதும், நான்காம் கழகம், ஆராய்ச்சிகள், அது இது என்றெல்லாம் வந்த வேகத்தில் உளறியவர்கள், நாளடைவில் அவற்றை மறந்துவிட்ட, அன்றாட அரசியல் ஆரவாரத்தில் ஊதியந்தேட முயல்வதும், இன முயற்சிக்கும் முன்னேற்றத்திற்குமென்று எதையும் அடியூன்றச் செய்யாமல், ஆரியத்திற்கும் வடநாட்டுப் பூரியத்திற்கும் அடிபணிந்து கிடப்பதும் கொடுமை கொடுமையிலும் கொடுமை!

இனி எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மூஞ்சி முகரைகள் இவ்வாறிருக்க இனங்காப்பதற்கென்றே எழுந்த இயக்கமாகத் தன்னைக்