பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

241

மன்னிப்புக் கேட்டது. இல்லை. “கெஞ்சுவதில்லை” என்னும் கொள்கை முழக்கத்தைத் தென்மொழி என்றுமே கைவிட்டதில்லை. மிசாக் கால ஓராண்டுச் சிறையை முழுவதும் நான் ஏற்றுக் கொண்டே வெளிவந்தேன். இடையில் விடுமுறை(parole) எடுத்துக் கொண்டு வெளிவந்து, வீட்டு நிலையையும் அச்சக, இதழ்கள் நிலைகளையும் சரிப்படுத்திவிட்டுப் போக எண்ணி, அரசுக்கு விடுமுறைக்கு வேண்டுகோள் எழுதியிருந்தேன். ஏனெனில், அக்கால் மிசாவில் இருந்தவர்களுக்கு அவரவர் கட்சிச் சார்பில் மாதத்திற்கு 300, 400, 500,1000 என்று அவரவர் குடும்பங்களுக்கு உதவித் தொகை கொடுக்கப் பெற்றது. ஆனால் நமக்கோ அக்கால் உதவுவார் (நம் அன்பர்களைத் தவிர) எவரும் இல்லை. எனவே விடுமுறை கேட்க வேண்டியிருந்தது. அதுவும் கிடைக்கவில்லை அதை இப்பொழுது இவ்வாறு திரித்துப் பேசுவது அவர்களுக்கே நல்லதில்லை. ஒருவரை யொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதானால், அந்நிலை எங்கே போய் நிற்குமோ தெரியாது. முடிவாக நாம் என்றும் எப்பொழுதும் எந்தக் கொள்கையையுமே கைநெகிழ்த்ததில்லை.

பொதுவான உண்மை ஒன்று உண்டு; ஒருவர் தாம் மெலிவு அடைகிற போதுதான் பிறரைக் குறைகூற முற்படுகிறார் என்பதே அது. அதன்படி அவர்கள் இவ்வாறு கூறத் தொடங்கியுள்ளார்களோ, என்னவோ?

அடுத்தபடி, நாம் பிரிவினைத் தடைச்சட்டத்தை எரிப்போம் எனத் தீர்மானம் போட்டது உண்மைதான். ஆனால் அதன் பின்னர்தான் அப்படி ஒரு தனிச்சட்டமே (separate Law) இல்லை என்று தெரிய வந்தது. அதன் பின்னர் வேறு நடவடிக்கை எடுப்பதற்காக எண்ணி வருகிறோம்

அதுசரி, செயலில் நாம் கோழைகள் அல்லது மோழைகள் என்று குறைகூறப் புகுந்த இவர்கள் இதுவரை செய்த வீரச் செயல்கள்தான் என்ன? கூட்டம் கூட்டுவதும் மாநாடுகள் போடுவதுமா? அவற்றுக்கான எதிர்விளைவுகளைத்தாம் நடுவணரசின் இந்தித் திணிப்பில் நாம் நேரடியாகப் பார்க்கிறோமே! இனி, இன்னொன்று நமக்கும் நம் முன்னோர் வைத்த வைப்பு என ஒன்றிருந்தால் நாமும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாநாடுகளையும் நடத்தலாம்; மேலும் மேலும் வருவாய்களையும் "அறுவடை" செய்யலாம், அவ்வாறு செய்வதற்கு நம் இயக்க முதலீட்டுக் கென்று ஓர் 'ஐயா' வோ 'அம்மா' வோ இருக்கவில்லையே, நாம் தாமே முதலும் ஈட்டமும். பின் என்ன