பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வேண்டும் விடுதலை

ஆணியைக் கொண்டு குத்துவதைப்போல், அவர் தகரி(பீரங்கி)யைக் கொண்டு வேட்டுக் கிளப்பியிருந்தால், நாம் பட்டாசு வெடிகளைக் கொளுத்தி, அந்த வெறி யானையின் முன்னர் போடுவதுபோல், நாமும் சலசலப்புகளைக் கிளப்புவதும், தகரக் குவளைகளை எடுத்துத் தட்டிக் காட்டுவதும், தீப்பந்தங்களைப் போன்ற தீர்மானங்களை, வெறும் வாய்ச் சொற்களால் கொளுத்தி வீசி எறிவதும், போராட்டங்கள் என்னும் பெயரில் வண்ண வாணங்களையும், விளம்பரப் பூ மத்தாப்புகளையும் கொளுத்திப் பெரியார் திடலிலிருந்து வெளியிட்டுக் காட்டுவதும், ஏற்கனவே நாம் கண்டும், காட்டியும், கையாண்டும் புளித்துப்போனவையும், சலித்துப் போனவையுமான வழிமுறைகள் இல்லையா, என்பதே நம் அடுத்த கேள்வி.

தந்தை பெரியார், 1930ஆம் ஆண்டு, தஞ்சை, நன்னிலத்தில் கூட்டிய சுயமரியாதை மாநாட்டிலேயே (திராவிடர் கழகமாகக் கருக்கொண்டு உருவாகாமல் இருந்தபொழுதே இந்தியை எதிர்த்துப் பேசியும், தீர்மானம் போட்டும் காட்டினார். அதன்பின் 1937இல் இராசாசி இந்தியைக் கட்டாயமாக்கியதை, அதே ஆண்டு இறுதியில், மாநாடு கூட்டிக் கண்டித்துத் "தமிழ்நாட்டை தனிநாடாகப் பிரிக்க வேண்டும்" என்னும் வரலாற்றுப் புகழ்மிக்கத் தீர்மானத்தையும் நிறைவேற்றிக் காட்டினார்.

இன்று, நாம் அதுபோல் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவும், நிறைவேற்றவும் தொடை நடுங்கிக்கொண்டு, அஞ்சியஞ்சி, 'இப்படியே இந்தியைத் திணித்துக் கொண்டிருந்தால், இந்தியா சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும்' என்று பேசியும், அப்பேச்சையே கூடத் தீர்மானமாக நிறைவேற்றத் துணிவின்றி, 'ஆங்கில மொழியையே இணைப்பு மொழியாக ஆக்கவேண்டும்' என்று ஆங்கிலத்தையே தூக்கிப் பிடித்தும், தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறோம். காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு வரும் போரின் இந்தித் திணிப்புக்கு இந்த எதிர்ப்பும், இணைவான், இனிப்புப் பேச்சும் போதுமா, என்பதே நம் மூன்றாவது கேள்வி

சூடற்றுச் சுரணையற்று, நாம் காட்டுகின்ற உள்ளுணர்வுகளையும், கருத்துகளையும் கோரிக்கைகளையும், எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், ஒரு சிறு அளவிலும் காதிலோ, கருத்திலோ வாங்கிக் கொள்ள்த வட் நாட்டு இத்தி வெறியர்களுக்கும், வலதிகார் வஞ்சகர்களுக்கும், நெஞ்சில் ஈரமும் - இரக்கமும் அற்ற அர்சியில் கென்டியவர்களுக்கும் பெரியார் என்னும் அரிமாவாலேயே