பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

249

இந்தியைப் பற்றித்தான் எல்லா வரலாறும் இங்குள்ளவர்களுக்குத் தெரியுமே! கடந்த அறுபது ஆண்டுகளாக அதுபற்றிய விளக்கங்களும், அதை எதிர்த்துத் தகர்க்க வேண்டிய தேவைகளும்தாம் மலைமலையாக கூறப்பட்டு வந்துள்ளனவே! இன்னும் யாரைத் தட்டியெழுப்ப இம் மாநாடுகள்? யாருக்கு உணர்வூட்டுவதற்கு இம்முயற்சிகள்? யாரை ஏமாற்றுவதற்கு இப்போராட்டங்கள்?

நாம் இனி எழுப்ப வேண்டுவது, மக்களை அன்று நம்மைத்தான் நாம் எழுப்பிக் கொள்ளவேண்டும்!

நாம் இனி உணர்வூட்ட வேண்டுவது, இளைஞர்களுக்கு அன்று, நமக்குத்தான் உணர்வூட்டிக் கொள்ளவேண்டும்!

நாம் இனி, ஏமாற்றுவதற்காகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது; ஏமாறாமல் இருக்கின்றோம் என்கிற போராட்டங்களை நடத்த வேண்டும்?

எழுதியிருக்கின்ற இந்தி எழுத்துகளை அழித்தால் அவன், மீண்டும், நம்முடைய வரிப்பணத்தை எடுத்தே நன்றாக அழுத்தந் திருத்தமாகவும், முன்னையவற்றையும் விடப் பெரிதாகவும் எழுதிக் கொள்கிறான்!

நாம் தூக்கும் கரிநெய்(தார்)ச் சட்டிக்கும் எழுது தூரிகைக்கும் செலவழிக்கும் பணத்தை, வெடி மருந்துக்கும், துமுக்கிக்கும் (துப்பாக்கி) செலவழிக்க வேண்டும். அதே எழுத்துகளை யாகிலும் மண்ணெய் கொண்டு அழிக்காமல் துமுக்கிகொண்டு சுடப் போகிறோம் என்று அறிவிக்க வேண்டும். இந்திக்காரனைச் சுடாமற் போனாலும், இந்தி எழுத்தையாவது சுடும்படியான புதிய போராட்டத்தை, உந்துவேகம் கொண்ட உணர்வுச்செயலை நாம் நடத்திக்காட்ட வேண்டும்.

இதற்குப் பெயர்தான் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ !

தந்தை பெரியார் கரிநெய்ச்சட்டி எடுத்துக்கொண்டு போய் இந்தியை அழித்தால், நாம் துமுக்கி கொண்டாவது அந்த எழுத்தைச் சுட்டிக்காட்டிப் போராட வேண்டாவா? இப்படிச் செய்தாலன்றோ, நமக்குப்பின் வருபவர்களாகிலும், அதே துமுக்கியை எடுத்துப் போரிட வருவார்கள்!

எனவே, பறவைகளை விரட்டுகின்ற முறையில், 'ஆலோலம்' என்னும் இந்தி எதிர்ப்புக் கருத்துகளை மாநாடுகளில் எடுத்துக் கூறி