பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

வேண்டும் விடுதலை

கருத்துக்கு மாறுபட்டவையாகவே உள்ளன என்பதை நாம் கவனிக்கவேண்டிய தேவையில்லை.)

ஆங்கிலம் - இந்தி - தொடர்பான இந்தக் கருத்தையும் 1978ஆம் ஆண்டில் மதிப்பிற்குரிய வீரமணி அவர்கள் கூட்டிய மாநாட்டிலேயே நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

எனவே, நம் தாய்மொழியான தமிழ்மொழியை வளர்க்கவும் வளப்படுத்தவுமே நாம் இந்தியை எதிர்க்கவேண்டும். இதே காரணத்துக்காகவுமே சமசுக்கிருதத்தையும் நாம் தவிர்க்கிறோம்; அல்லது எதிர்க்கிறோம் என்பதையும் அறிதல் வேண்டும்.

ஆங்கிலம் இந்தியாவின் இணைப்புமொழி ஆகவேண்டும் என்பதை வடநாட்டு இந்தி வெறியர்களும், இங்குள்ள தேசிய அடிமைகளும் ஒப்பமாட்டார்கள். இதற்குக் காரணம் வடவர்க்கு இந்திமொழியின் மேல் உள்ள வெறியும், இங்குள்ள தேசியத் திருடர்களுக்குத் தமிழ்மொழியின்மேல் உள்ள பற்றின்மையுமே! அதுபோலவே, இந்தியை எதிர்ப்பதற்கும் நாம் தமிழை விரும்புவதே அதன் மேலுள்ள பற்றே காரணமாக இருக்கவேண்டும்.

'சப்பான் மொழியில் படிக்க சீனர் விரும்பமாட்டார்கள்' என்பதை, 'இந்தியில் படிப்பதைத் தமிழர் விரும்பமாட்டார்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக மதிப்பிற்குரிய வீரமணி கூறுகிறார். 'அவ்வாறு கூறும்போது தமிழர் ஆங்கிலத்தில் மட்டும் படிப்பதை ஏன் விரும்பவேண்டும்?'

'எனக்குத் தமிழ்ப்பற்று இல்லாமல் இல்லை' என்று வீரமணி சொல்ல வேண்டுவதில்லை. அவ்வாறு இல்லை என்று யார் சொன்னது?

'ஆங்கிலம் அறிவியல் மொழியாக வளர்ச்சிபெற்றிருக்கிறது – என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், அந்த அளவுக்குத் தமிழும் வளர்ச்சிபெறவேண்டும்' என்னும் கருத்து இன்னும் தோன்றவில்லையே என்பதுதான் நம் வருத்தம்; மனக்குறை! அந்நிலை எளிதில் முடிகிறதோ இல்லையோ அந்த நோக்கமே நமக்கு வேண்டியதில்லை என்று நாம் சொல்ல முடியுமா? அப்படியானால், தமிழுக்காக நாம் ஏன் இத்தனை முயற்சிகள் செய்யவேண்டும்? எனவே, இந்திமொழிக்கு மட்டுமன்று, சமசுக்கிருதத்திற்கு மட்டுமன்று, ஆங்கிலத்திற்கும் நாம் அடிமையாகி விடக்கூடாது என்பதே நம்