பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

வேண்டும் விடுதலை

அறிக்கையை ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பித் தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. அறிக்கையின் ஆங்கில வாசகத்தையும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கீழே தருகிறோம்.

எத்தகைய சூழ்நிலையிலும், எதற்கும் அஞ்சாமல் அரசு நடவடிக்கைக்குக் கவலைப்படாமல் தமிழின முன்னேற்ற முயற்சிகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. என்பதை அன்பர்கள் தெளிவாக, இவ்வறிக்கையினின்று விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இந்தச் சூழ்நிலையில், நம் இயல்பான முயற்சிகளுக்காக அரசு எந்த அளவு தண்டனை கொடுத்தாலும் நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்ள அணியமாகவே இக்கடுமையான, அஞ்சத்தக்க நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். அப்போக்கில் இன்று போல் என்றுமே உறுதியுடன் இருப்போம் என்பதை அன்பர்களுக்கும் அதே பொழுது அரசுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி, ஐதராபாத்தில் நடந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை வருமாறு:-

தமிழ் மாத இதழ் 'தென்மொழி' தமிழ்க்கிழமை இதழ் 'தமிழ் நிலம்’ ஆகியவற்றின் மேல் அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறிய குற்றச்சாட்டுகளின்படி, நடுவணரசின் செய்தித்தாள் கழகம் 1986, அக்டோபர் 28 இல் ஐதராபாத்தில் எடுத்த தீர்மான முடிவு.

கடந்த 1986, சனவரி 17-இல் அரசின் (தகவல்) மற்றும் செய்தி பரப்புத்துறை அமைச்சகம், தமிழ் மாத இதழான ‘தென்மொழி' தன் சூலை - ஆகத்து 1985 வெளியீட்டிலும், தமிழ்க்கிழமை இதழான ‘தமிழ்நிலம்' தன் 1985 சூலை 28 வெளியீட்டிலும், அவற்றின் வாசகர்களிடையில் பிரிவினை நோக்கத்தைத் தம் ஆசிரியவுரைகளில் வெளிப்படுத்தியிருந்தன என்று, ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இவற்றுள், முதல் வெளியீட்டில் இலங்கை அரசாலும், அதன் பாதுகாப்புப் படைகளாலும் கொடுமைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவாத திரு. இராசீவ் காந்தியின் நடவடிக்கையைத் திறனாய்வு செய்திருக்கிறது. இரண்டாம் வெளியீட்டில், தமிழின் முன்னேற்றத்ததிற்கு முடிவான தீர்வு இறைமை பெற்ற தமிழ்நாட்டு அரசை அமைப்பதே என்று கூறப்