பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

வேண்டும் விடுதலை

நடைபெறும். அதன் முடிவு இரண்டாம் நாள் கருத்தரங்கின் முடிவில் கருத்தரங்கின் ஒரே தீர்மானமாக நிறைவேற்றப்பெறும்.

கருத்தரங்கில் தம் முடிவான கருத்துகளை எடுத்துக்கூற விரும்புபவர்கள் முன்னமேயே, முதல்வர்க்கு எழுதித் தம் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்......

— தமிழ்நிலம், இதழ் எண். 74, செபுதம்பர் 1986


தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு !

பேரன்புள்ள தமிழ் நெஞ்சங்களே!

வணக்கம்.

தமிழினம் இன்றைக்கு உள்ள நிலை மிகவும் கேடானதாகும். அரசியல் நிலையிலும், பொருளியல் நிலையிலும் மற்ற மொழி, கலை, பண்பாட்டு நிலைகளிலும் நாளுக்கு நாள் இது மிகவும் நலிந்துகொண்டும் வலுவிழந்து கொண்டும் வருகிறதை நாம் அனைவருமே உணர முடியும்.

நமக்கென்று உள்ள நம் அரசியல் கட்சித் தலைவர்களும், பிற சாதி, இனத் தலைவர்களும் அவரவர்களால் ஆன முன்னேற்ற முயற்சிகளைச் செய்துகொண்டு வந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமான வலுவை வருவித்துக் கொண்டு, அல்லது உருவாக்கிக் கொண்டு முயற்சி செய்வார்களேயானால், ஏதாவது ஒரு சிறு அளவிலாகிலும் நாளுக்கு நாள் நம் இனத்திற்கு ஒரு வகை முன்னேற்றம் ஏற்படும் என்று கருதலாம். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை.

எனவே, இதைப் பற்றி நாம் அனைவரும் இக்கால் மிகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. நம்மை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் இந்திய அரசின் முதலாளியப் பார்ப்பனிய ஆட்சியாளர்களும் சரி, நம் தமிழ்நாட்டுத் தில்லியரசின் அடிமைகளும் சரி, நாளுக்கு நாள் நமக்கு நலிவுகளையும் மெலிவுகளையுமே உருவாக்கி வருவதுடன், இவ்வினம் மேலும் மேலும் சிதைந்து வலுக்குறைந்து போக வேண்டும் என்னும்படியாகவே செயலாற்றி வருகிறார்கள். எனவேதான் நாம்