பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

வேண்டும் விடுதலை

சீட்டுகள் அச்சிட்டு அனுப்பவும், அவற்றைக் கொண்டு தொகை தண்டிக் கொண்டிருக்கவும் நமக்கு நேர்மில்லை. ஆனால், அனுப்பப்பெறும் ஒரு காசுக்கும் தமிழ்நிலத்தில் பெயர்ப் பட்டியல் வெளியிடப் பெறும்.

மொத்தமாகத் தண்ட விரும்புபவர்கள் இந்த அறிக்கையையே பொதுமக்களிடம் காட்டி, ஆங்காங்கே தண்டி அனுப்பலாம். ஆனால் தண்டுபவர்களைப் பற்றி அவர்கள் நன்கு தெரிந்திருப்பது நல்லது. ஏமாறிப் போகிறவர்களை நாம் தடுக்க முடியாதாகையால் இவ்வகையில் அவரவரும் விழிப்புடன் இருக்க வேண்டுவது அவர்கள் பொறுப்பாகும்.

கருத்தரங்கில் தம் முடிவான கருத்துகளை எடுத்துக் கூற விரும்புபவர்கள் அனைவர்க்கும் கூடியமட்டில் வாய்ப்பளிக்கப்படும்.

அனைத்துக்கும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள். பிற விளக்கங்கள் பின்னர் வரும்!

— தமிழ்நிலம், இதழ் எண். 75, அத்தோபர், 1986