பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

25

அண்மையில் கூடிய சமற்கிருத மொழிக்குழு கூறுகின்ற அளவிற்கும் என்று கூற வேண்டியுள்ளது. எனவே இந்தியா ஒரு பெரிய நாடாகவே இயங்குமானால் தென்னாட்டுப் பகுதிகளில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும், வடநாட்டுப் பகுதிகளில் வடநாட்டுப் பார்ப்பனர்களும் தாம் மேலோங்கி நின்று இங்குள்ள மற்ற பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று வெளிப்படையாகக் கூறலாம். இவ்வடிப்படை உண்மையை இனி வரப்போகும் இந்தியாவில் உள்ள எந்தக் கட்சியின் ஆட்சியும் மாற்றிவிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம்.

பேராயக் கட்சியில் திரு. காமராசரின் கை ஓங்கியிருப்பது போலத் தோன்றினாலும், உள்ளூர நடைபெறும் பலவகையான ஆட்சி அரிப்புகளில், தமிழர்கள் குறிப்பாகத் தென்னாட்டு மக்கள் தென்பகுதி வடபகுதிப் பார்ப்பனர்களுக்கு ஏதோ ஒரு வகையிலேனுேம் அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டியிருக்கின்றனர். தமிழகத்திற்கு வந்து வாய்த்த அடிமை நிலைகளோ சொல்லுந்தரமல்ல. மொழியாலும், இனத்தாலும், சமயத்தாலும், இன்றையத் தமிழன் மிகக் கீழான நிலையில் தனக்குற்ற அடிமை நிலையினைக் கூட உயர்வு என்று நினைக்கும் அளவிற்கு அறியாமை அடிமையாகக் கிடந்து உழல்கின்றான். இங்குள்ள அரசியல் கட்சிகளும் கூட அவ்வறியாமை அடிமைகளின் கூட்டமாகவே இயங்கிவருகின்றனவேயன்றி, தம்தம் வல்லடிமைப் போக்கை அடியூன்ற உணர்ந்து அறிந்து அதினின்று தேர்ந்து தெளியுமாறில எனவே இன்றிருத்தல் போல இன்னும் எத்தனை ஆண்டுக் காலமாயினும். இப்பொழுதுள்ள காமராசர் போல் இன்னும் எத்தனை காமராசர்கள் வந்தாலும் இந்தியாவின் ஆணி வேருடன் ஊன்றப்பட்டுக்கிடக்கும் இவ்வுண்மையான ஒற்றுமையற்ற ஆண்டான் அடிமைப் போக்கை மாற்றிவிடவே முடியாது. அடங்கி அடங்கித் தலையெடுக்கும் இச்சிக்கலால் தான் இந்தியா இத்தனை காலம் கடன் பட்டும் பொருள்களையும் உழைப்பையும் செலவிட்டும் அகப்புற விளைவுகளில் நசித்துக் கொண்டே உள்ளது. ஊன்றிக் கவனிப்பின் இந்தியாவின் இன்றையக் குமுகாயத் தோல்வியினை உணராமற்போகார்

மேலே குறிப்பிட்ட இயற்கைக் குறைபாடன்றிச் செயற்கை குறைபாடுகளும் இந்தியாவின் ஒருமைப்பாட்டு எண்ணத்தால் செழித்து வளர்ந்து வருகின்றன. தமிழர்களின் வாழ்விற்கு