பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

269


 
தமிழ்நாட்டு விடுதலை முயற்சிகளை
எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது!


ண்மையில் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு மூன்று குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளை யடுத்து, நடுவணரசுப் புலனாய்வுத் துறையினர்(C.B.I.), தென்மொழி யன்பர்களையும் உ.த.மு.க. அன்பர்களையும் பலவகையிலும் ஆங்காங்கே கடுமையாக அணுகி உசாவி வருவதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. தலைமையகங்களிலும் அவ் வுசாவல்கள் நடந்து வருகின்றன.

பொதுவாக நடுவணரசுக்கு - குறிப்பாக இராசீவுக்குத் தாங்கள் செய்யும் குற்றங்கள் என்னென்ன என்பது பற்றியோ, அவற்றைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது பற்றியோ, அதனால் மக்களிடையில் என்னென்ன எதிர்விளைவுகள் நேரும் என்பது பற்றியோ சிறிதும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. அதைப்பற்றி யார் என்ன கருதினாலும் சரி, தாங்கள் செய்வதைச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் முரண்டும், பொதுமக்கள் நலன் கருதாத தன்மையும், இந்திரா காலத்தை விட, இராசீவ் காலத்தில் அரசுக்கு மிகுதியாகவே உண்டு. இந்த அகங்கார - ஆணவ எண்ணமே இராசீவ் அரசுக்கு வெடிகுண்டாக அமைந்துவிடக்கூடியது. வேறு வெடிகுண்டுகள் தேவையே இல்லை.

மக்கள் தங்களுடைய இழுப்புகளுக்கெல்லாம் அல்லது கட்டுப்பாட்டுக்கெல்லாம் அடங்கி நடக்கவேண்டுமே அல்லாமல்,