பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

வேண்டும் விடுதலை

கன்னடம், மலையாளம், முதலிய திராவிட மொழிகள் தோன்றின. தமிழில்லாமல் அம் மொழிகள் இயங்க முடியாது. எனவே, அவர்களுக்குத் தமிழ் தாய்மொழியே! இன்னும் சொன்னால், அவர்களுக்கு அம் மொழிகள் தாய் மொழிகளானால் நம் தமிழ் மொழி அவர்களுக்கும் தாய்க்குத் தாயான மொழியே! அஃதாவது பாட்டி மொழியே! தமிழை அவர்கள் வெறுப்பது தேவையில்லை தாய்க்குத் தாயான தமிழ்மொழியில்லாமல் அம்மொழிகள். உயிர் வாழ முடியாது. எனவே அவர்களுக்கும் நம் தமிழ் மொழியைப் படிக்கும் கடமையுண்டு உரிமை உண்டு. அவர்களும் இம் மொழியை விரும்பிப் படிப்பிதில் தவறில்லை; கேடில்லை; இழுக்கு ஒன்றும் இல்லை.

இனி, தாய்மொழிக்கு அடுத்தபடி நம் தமிழினம் மேலானது ஆகும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நம் தமிழினத்தை நேசிக்க. விரும்ப உறவு கொண்டாட வேண்டும். தமிழினத்தவர்கள் அனைவரும் நம் உடன் பிறப்புகளே! உறவானவர்களே! அவர்கள், சாதி நிலையில் மத நிலையில் வேறு வேறானர்கள் ஆகலாம். அவர்கள் முதலியார்கள், செட்டியார்கள் வேளாளர்கள், கவண்டர்கள், பிள்ளைமார்கள், படையாட்சிகள் என்று வேறு வேறாகப் பிரிந்து காணப்படலாம். இன்னும் அவர்களுள் தாழ்ந்த சாதியினராகப் பள்ளர்கள், பறையர்கள் சாணார் என்று கீழ்ச் சாதியிராக மதிக்கப் பெறலாம். ஆனால் அவர்கள் எல்லாரும் தமிழ் மொழியைத் தாய், மொழியாகக் கொண்ட தமிழரே! அவர்கள் அனைவரும் ஓரினத்தவரே! அவர்களுக்குள் சாதிப் பாகுபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஏற்றத் தாழ்வில்லாத தமிழர்களே! அவர்கள் இன்று நேற்றன்று; கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக இத் தமிழ் நிலத்திலேயே! வாழ்ந்து வருபவர்களே! தொடக்கத்தில் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருந்ததில்லை. இடைக்காலத்திலேயே அவர்கள் செய்யும் தொழில்களால் வேறுபட்டுப் போனார்கள். பல வேறு சாதிகளாகப் பிரிந்து போனார்கள். பிளவுபட்டுப் போனார்கள். அதனால் அவர்களுக்குள் வேற்றுமை தலையெடுத்தது; வேறுபாடுகள் தோன்றின; பகைகள் கால் கொண்டன; ஏற்றத் தாழ்வுகள் இடம் பிடித்தன. தொடர்புகள் அறுந்தன; உறவுகள் முறிந்தன. உண்மைகள் மறைந்தன. எனவே அவர்கள் நிலையாக வேறுபட்டனர். வேறுபட்டது மல்லாமல், ஒருவருக்கொருவர் பகைகொண்டு, ஒருவரையொருவர் அழித்தொழிக்கவும் முற்பட்டு