பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

277

விடுகின்றனர். எனவே தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது; இழிந்து வருகிறது; ஒற்றுமையுணர்வுகள் குறைந்து, வேற்றுமை யுணர்வுகள் மிகுந்து, சீர்குலைந்து சிறப்பிழந்து வருகின்றது.

இந்த நிலைகளின் உண்மையுணர்ந்து தெளிந்தவர்களே தமிழினத்தை ஒன்று படுத்தத் துணிகின்றனர். இதன் வேற்றுமைப் பாடுகளை அகற்ற முயற்சி செய்கின்றனர். எப்படியாயினும் இவ்வினத்தில் வேரோடிக் கிடக்கும் சாதி வெறிகளையும் மத மூட நம்பிக்கைகளையும் அகற்ற அரும்பாடு படுகின்றனர். இருப்பினும் இம் முயற்சி ஒரு சாண் ஏறினால் ஒரு முழம் சறுக்குவதாகவே உள்ளது. இவ்வாறு கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே இச் சீர்திருத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பயனோ மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் தமிழின முன்னேற்றத்தை விரும்பாதவர்களும் எதிர்ப்பவர்களும் முறியடிப்பவர்களுமான இதன் எதிரிகளின் வலிவு மிகுந்து வருவதே ஆகும்.

தமிழினம் முன்னேறிவிட்டால் எங்கு தன்னினம் பின்னிறக்கம் அடைந்து விடுமோ என்று அஞ்சியும் அலமருண்டும். அதன் எதிரி இனம் இதனைப் பலவகையிலும் ஒற்றுமைப்படாமல் தடுத்து வருகிறது. அத்துடன் மேலும் அதன் உட்பிளவுகளையும் பகைமைகளையும், வேறுபாடுகளையும் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது. பல வகையான சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் அதன் பொருட்டு மேற்கொள்ளுகிறது. சாதியுணர்வுகளைப் பல நோக்கங்களுக்காகத் தூண்டி விட்டும், தம் மூடநம்பிக்கைகளைப் பலவகையிலும் வேரூன்றச் செய்தும், தமிழ் மக்களுக்குள் உடன்பாட்டுச் சிந்தனையையும், உரிமை உணர்வையும் அழித்து வருகிறது; தமிழின இளைஞர்களிடம் பொழுது போக்கு, போலி விளையாட்டு உணர்ச்சிகளை வேரூன்றச் செய்தும் பண்பாட்டுச் சீரழிவுகளைப் பரப்பியும், அவர்களிடம் கால் கொள்ள வேண்டிய மொழி, நல, இனநல, நாட்டு உரிமை நல்லுணர்வுகளை முளையிலேயே கிள்ளி வருகிறது.

ஆனால் நம் இளைஞர்கள் இவைபற்றிய உண்மை நிலைகளை நன்கு உணர்ந்து கொண்டு, இவ்வினம் முன்னேறுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் செய்து, எப்படியாகிலும் தமிழின நலம் காக்கவேண்டும். அதற்கு இப்பொழுதிருந்தே நம் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் உள்ளத்தில் ஓர் உறுதி- சூளுரை-