பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

285

இவ்வெச்சரிக்கை, இந்தியாவின் மறைமுக வல்லதிகாரக் கொள்கையை உறுதிப்படுத்துவதுடன், புலிகளைக் காட்டி, இலங்கை ஆட்சியை எப்பொழுதும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் போராளிகளுக்கும் இலங்கை ஆட்சிக்கும் ஒரு நல்லுறவு ஏற்படுவதையோ அதன் வழி இலங்கையில் அமைதியான ஆட்சி நடைபெறுவதையோ, இவற்றினால் தமிழினத்திற்கு ஒரு நல்விளைவு உருவாவதையோ விரும்பவில்லை என்பதையும் இப் பேச்சு தெளிவாகக் காட்டுகிறது. அதில் அச்சுறுத்தல் உணர்வும் கலந்தே இருப்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனி, தீட்சித் மேலும் பேசுகையில், இந்திய ஆட்சியினரின் உள்மனத்தில் அழுந்திக் கிடக்கும், "தமிழர்க்கு இறைமை ஆட்சி உரிமைகள் உள்ள ஒரு நாடு கிடைக்கவே கூடாது என்னும் கரவான எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் பேச்சைக் கவனியுங்கள்.

"இலங்கையில் (அல்லது இந்தியாவிலுமோ வேறு எங்குமோ) தமிழர்களுக்கென தனிநாடு ஒன்றை உருவாக்குவது இந்தியாவின் நோக்கமன்று. (இதைத்தான் நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் மக்களுக்குக் கூறி வருகிறோம். அதை இப்பொழுது தீட்சித் (அஃதாவது இராசீவ் பரம்பரையினர் கருத்தை) உறுதிப்படுத்திக் கூறுகிறார். இதை நம் வீடணத் தமிழர்கள் மூப்பனாரும் சிதம்பரங்களும் கவனிக்க வேண்டும். இனி இன்னும் தீட்சித் கருத்தை உண்மைத் தமிழாகள் கவனிக்க வேண்டும்.) இலங்கையில் பிரிவினையை உருவாக்குவதற்கான வேலையில் இந்தியா உடைந்து சிதறுவதற்கான தொடக்கப் பணிகளைத் தொடங்கியதாகத்தான் பொருள். தனி ஈழக் கோரிக்கையை (அஃதாவது தனி ஈழம் அமைவதை) இந்தியா ஒருபோதும் ஆதரித்ததில்லை. தனிஈழக் கோரிக்கையை ஏற்பதென்பது இந்தியா இதுவரை எந்தக் கொள்கைகளுக்காக வழக்காடியதோ, (அஃதாவது இந்தியா ஆரிய இனத்தவர்களாலேயே நிலையாக ஆளப்பெற வேண்டும் என்பதுதான் அவர்கள் கொள்கை என்பதைத் தமிழர்கள் இப்பொழுதேனும் விளங்கிக் கொள்க) அவை அனைத்தையும் தவிர்ப்பதாகும். பிளவுபடாத பல இன் மக்களைக் கொண்ட் நாட்டையே இந்தியா எப்பொழுதும் வலியுறுத்தியுள்ளது. (எப்பொழுது என்றால்; வரலாற்றுக் காலத்திலிருந்தா? இல்லையே, அப்பொழுதெல்லாம் இந்தியா