பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

வேண்டும் விடுதலை

ஒன்றாக இருந்ததில்லையே இந்தியா ஆரியர் தங்கள் கைகளில் ஐரோப்பிய ஆரியர்கள் இந்திய ஆட்சி உரிமையை (சுதந்திரத்தை) ஒப்படைத்த திலிருந்து தானே இந்தக் கரவான ஓரின நுகர்வுரிமையை (ஏக போக சுதந்திரத்தை) பிற இனத்தவர்களுக்கு விட்டுவிடக் கூடாது; நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க முடியும். நேரு, அவருக்குப் பின் அவர் மகள், அவருக்குப் பின் அவர் பெயரன் என்னும் வரிசையில் வந்த வலியுறுத்தம் தானே அது.)

தீட்சித்தின் இந்தக் கருத்துக்கு இலங்கை மகாவேலி மீவளர்ச்சி (அபிவிருத்தி) அமைச்சர் காமினி திச்சநாயக, அக் கருத்தரங்கிலேயே தன் உணர்வு ஒப்புதலை அளித்துக் கீழ்வருமாறு கருத்தறிவித்திருக்கிறார்.

'திராவிடர்கள் (அஃதாவது தமிழர்கள்) பலமுறை இலங்கை மீது படையெடுத்தனர். ஆனால் சிங்கள அரசன் துட்டகைமுனு திராவிட (தமிழ்) அரசன் ஒருவனை முறியடித்து உரிமை இலங்கையை ஏற்படுத்தினான். (அதற்கு முன் இலங்கையின் பெரும்பகுதி தமிழரசர் கையிலும், ஒருசிறு பகுதி(மேற்கே) சிங்கள அரசரின் கையிலும் இருந்தன. துட்டகைமுனு என்பவன் இராசீவ் போன்ற ஆரிய இனவெறியன். அவன் கைக்கு இலங்கை வந்த பின்தான் சிங்களவர் ஆட்சியை, இப்பொழுது இராசீவ் செய்கிற முயற்சியைப் போல் செய்து நிலைப்படுத்திக் கொண்டான்) அந்தச் சிங்கள அரசன் (துட்டகைமுனுவின்) அரத்தம் ஒரு துளியாவது நம் அனைவரின் உடலிலும் ஓடிக் கொண்டுள்ளது. என்றார் (துட்டகைமுனுவின் அரத்தம் சிங்களவன் உடலில் இன்றும் ஓடினால், பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பனிமலை நெற்றியில் புலிபொறித்த கரிகாற் பெருவளத்தான் ஆகியோர் அரத்தங்கள் தமிழினத்த்வர்களின் உடல்களில் ஓடக் கூடாதா, என்ன?)

இனி, அக்கருத்தரங்கில் பேசிய இலங்கை உரிமை (சுதந்திர)க் கட்சி உறுப்பினர் அனில் சிங்கே, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து (ஆனால், தமிழர்களுக்குச் சார்பாக அன்று), தீட்சித்துக்கு விடை கூறும் வகையில் கீழ்வருமாறு பேசியதும் நாம் நினைவில் வைக்கத்தக்கது.

"இலங்கைக் குடிமக்களில் 95 விழுக்காட்டுப் பேர் ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. இலங்கை உச்சநெறி மன்றம் கூட ஒருமனதாக