பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

27

தென்னாட்டவர் தம் அறிவையும், ஆற்றலையும், வடவர்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு விட்டுக் கொடுத்தாலும் இங்குள்ளவர்கள் அவர்களின் முழு இசைவைப் பெறத் தவங்கிடக்க வேண்டியுள்ளது. செயலுக்கும் காலத்திற்கும் ஒத்துவராத இவ்வொருமைப்பாட்டின் அமைப்புக்கு எத்தனைத் துயரமும் பட்டு, தன்மானத்தையும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டுமோ?

இங்குள்ள திருக்குறளை அறநூலாக ஒப்புக் கொள்ளும் வட நாட்டினர் எத்தனைப் பெயர்? இங்குள்ள பாரதிதாசனை ஒரு புலவராக மதிக்கும் வடநாட்டுப் புலவர்கள் எத்தனைப் பெயர்? இங்குள்ள வரலாற்றை அங்குள்ள வரலாற்றோடு பொருத்தி எழுதும் வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் எத்தனைப் பெயர்? இத்தனை ஏன்? இக்கால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு வித்தூன்றியவராக இங்குள்ளவர்கள் பீற்றிக்கொள்ளும் பாரதியாரை அங்கிருக்கும் எத்தனைப் பெயர்கள் மதித்துப் போற்றுகின்றனர்? எந்தத் துறையிலும் அங்கிருக்கும் தமிழர்களில் ஒருவராகிலும், அல்லது இங்கு நடைபெறும் ஒரு செயலாவது அங்குள்ளவர்களால் மதிக்கப் பெறுவதற்காக எவராகிலும் தெளிவுபட எடுத்துக் காட்ட முடியுமா? காமராசர் ஒருவரைக் காட்டி- அதுவும் அவர் அடிமைத்தனம் தங்களுக்கெல்லாம் ஒரு பெரிய துணையாக இருக்கின்ற காரணத்தை மனத்திற்கொண்டு- வடநாட்டினர் எத்துணை விழிப்பாகத் தங்கள் நலங்களையும், இனங்களையும், மொழியினையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இங்குள்ள அடிமைத் தமிழர்கள் உய்த்துணர்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். மொத்தத்தில் இந்தியாவில் 96.3 இலக்கம் மக்களுக்கே தெரிந்த மொழி, இங்குள்ள 44 கோடிப் பேர்களின் வாயிலும் நுழையத்தான் வேண்டும் என்றும் அவர்கள் இட்ட ஆணை ஒன்றே அமைத்துக் கொண்ட சட்டம் ஒன்றே தென்னாட்டவர்களுக்கு வடநாட்டவர்கள் என்றென்றைக்கும் தீங்கே என்பதைப் தெளிவாகப் புலப்படுத்துகிறதல்லவா?

இந்த நிலையில் இங்குள்ள தந்நலக்காரர் ஒரு சிலரின் நல்வாழ்வுக்காக, ஒருசிலர் பெறும் பட்டம் பதவிகளுக்காக இங்கிருக்கும் நான்கு கோடித் தமிழரும் (இக்கணக்கும் பிழையே, இதுவும் அவர்கள் கணித்ததே.) தம் வாழ்வு நலன்களையும், மொழி நலன்களையும் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டு மென்பது எத்துணை மடமையும், ஏமாளித் தன்மையுமாகும். இச்சூழ்நிலைகள் எல்லாம் மாற வேண்டுமானால் இங்குள்ள