பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

வேண்டும் விடுதலை


 
தமிழ்நாட்டு விடுதலையே உரிமை
அரசியலை மீட்டெடுக்கும்!


இந்திராவையும் இராசீவையும் நாம் அன்றைக்கே தமிழினப் பகைவர்கள் என அடையாளம் காட்டினோம்

இன்றைக்குத்தான் தமிழினத் தலைவர்கள் உணர் கிறார்கள்!

இப்பொழுதும் சொல்கிறோம். எல்லாருமே ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குரல் எழுப்ப வில்லையானால், தமிழினத்தை அழித்துவிட்டுத்தான் இராசீவ் வேறு வேலை பார்ப்பார்!

அரசியலைத் தூக்கி எறியுங்கள்! வேற்றுமையை அகற்றுங்கள்! தில்லி அரசியல் நம்மை அடிமையாகவே வைத்திருக்கும்! தமிழ்நாட்டு விடுதலையே உரிமை அரசியலை மீட்டுக் கொடுக்கும்!

இனமான உணர்வைக் கலைஞர், வீரமணி, நெடுமாறன், கலிவரதன், நெடுஞ்செழியன், சானகி, செயலலிதா, வீரப்பன், காளிமுத்து, இரா. செழியன், சோமசுந்தரம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் எழுப்ப வேண்டும்!

அன்று, தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்த பொழுது, இந்திராவை, வலிவுபடுத்தி ஆதரித்துக் கை கொடுத்ததை, கலைஞர் இன்றைய நிலையில் மறந்திருந்தாலும், தமிழக வரலாறு என்றென்றும் மறவாது மன்னிக்கவும் செய்யாது. தாம் எதையுமே