பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

289

சரியாக எண்ணிச் செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்யும் கலைஞரின் வரலாற்றுப் பிழைகளுள் இதுவும் ஒன்றாகும். அன்று காமராசரைப் புறந்தள்ளினார். இந்திராவை எடுத்துப்போற்றினார். இப்பிழையை, இந்திரா ம.கோ. இராவை ஆதரித்தபொழுதுதான் உணர்ந்து விழித்துக் கொண்டார். இந்திராவுக்குக் கலைஞரும் ஒருவர்தாம் ம.கோ.இராவும் ஒருவர்தாம். எவரிடம் தமிழக மக்களைத் தமக்குச் சார்பாகத் திரட்டி ஆற்றுப்படுத்தும் ஆற்றல் மிகுதியாக உள்ளதோ, அவரையே இந்திரா, தன் நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள ஆதரிப்பார் என்னும் உண்மை கலைஞருக்கு மிகவும் பிந்திக் காலத்திலேயே விளங்கியது.

அதேபோல், காமராசரும், இந்திரா தலைமையமைச்சுப் பதவி ஏற்கவும், தன்னைப் பெருவலிவுபடுத்திக் கொள்ளவும் தொடக்கத்தில் தம் முழுத் துணையையும் தந்து விட்டுப், பின்னர் அவரால் தாம் அனைத்திந்திய அளவில் புறக்கணிக்கப்பட்டபொழுது. தாம் செய்த பெரும் பிழையை உணர்ந்து வருந்தித் தாம் அரசியலில் மீண்டும் ஈடேறாமலேயே மறைந்தார்.

இதே பிழையைக் கலைஞருக்குப் பின்னர் தமிழக ஆட்சிக் கட்டிலேறிய ம.கோ.இரா.வும் தம் இறுதிக்காலம் வரை தொடர்ந்து செய்து வந்து, இந்திராவோ அவருக்குப் பின்வந்தஇராசீவோ, தம்மைப் புறக்கணிப்பதற்குமுன் தம் பிழையை உணராமலேயே மறைந்து போனார். ஆனால், அப்பிழையை அவருக்குப் பின்வந்த திருவாட்டி, சானகி ம.கோ. இராவும் அவரின் உள்முகச் சாணக்கியர் வீரப்பனும் பின்னர் உணர்ந்து வருந்த வேண்டியவர்களானார்கள்.

இவ்வகையில்தான், தமிழகத்திலுள்ள பிற சிறிய அரசியல் கட்சியினரும் கூட, இந்திரா அளவிலோ, இந்திராப் பேராய அளவிலோ முன்னர் செய்து விட்ட பிழைகளுக்காககப் பின்னர் இத்தமிழக மக்களை எண்ணி மிகவும் வருந்தி உணர்ந்திருக்கின்றனர். நெடுமாறனும் அப்படித்தான். இனி சேழியனும் அவ்வாறுதான் கலிவரதனும் அன்னவர்தாம் இந்திராவையும், இந்திராப் பேராயத்தையும், இராசீவையும் நம்பித், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒருவகை வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகானும், பிற போராளிக் குழுக்கள் தலைவர்களும் கூடத் தத்தம் பிழைகளைப் பின்னர் உணரத் தொடங்கினர்.

அடுத்து, தமிழக அரசியல் களத்தில் , எத்தனையோ தப்பு