பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

வேண்டும் விடுதலை

விளையாட்டுகளை விளையாடி, இறுதியில் செயலலிதாவின் பணநிழலைப் பற்றியிருக்கும் திரு. சோமசுந்தரம் கூட, அண்மையில் ஓர் அறிக்கையில் இராசீவின் தமிழின இரண்டகச் செயலை ஆய்ந்து கண்டுபிடித்துக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஆனால், இந்நிலைகளை யெல்லாம் முன்னரே வரலாற்றடிப் படையில் கணித்துக் கூறி, இந்திராவையும் இராசீவையும் தமிழினத்தின் பகைவர்கள் என அடையாளங் காட்டிய பெருமை தென்மொழிக்கும் தமிழ்நிலத்துக்குமே உண்டு என்பதை, அவ்விதழ்களின் வாசகர்களும் அறிவார்கள்; நடுநிலையாக எண்ணிப் பார்ப்பின் முன் சுட்டிய தலைவர்களும் உணர்வார்கள். கலைஞரோ தம் விருப்பு வெறுப்புகளை அகற்றிக் கொண்டு, யார் பெரியவர் யார் சிறியவர் என்று எடையிட்டுப்பார்க்கும் மயக்க வுணர்வயுைம் தவிர்த்து விட்டு, எண்ணிப் பார்ப்பாரானால், அவருக்கும் புலப்படாமல் போகவே போகாது.

இனி, அன்றைக்கு மட்டுமன்று, இன்றைக்கும் இப்பொழுதும் சொல்கிறோம், தமிழினத்திற்கு இரண்டகம் மட்டுமன்று, இதையே அழிக்கின்ற தன்மையில், இந்திராவை விடவும் இராசீவ் பல மடங்கு கொடுமை மிக்கவராகவே விளங்குகிறார். தமிழகத்தலைவர்கள் எல்லாருமே ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குரல் எழுப்பவிலையானால் தமிழினத்தை அழித்து விட்டுத்தான் இராசீவ் வேறு வேலை பார்ப்பார்!

இன்னொன்றையும் இங்கு நினைவூட்டுகிறோம். காமராசர் காமராசர் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக் கொண்டு, தம் திரண்ட சொத்து நலன்களை, எவ்வாறேனும் காத்துக் கொள்வதற்காக அரசியல் பேச்சுப் பேசித் திரியும் மூப்பனார் இறுதிக் காலத்தில் தம் குருவானவர்க்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும் இழிவுகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்ள இப்பொழுதே சொல்லி வைக்கிறோம். அரசியல் சூறாவளியில் அடி மேலாகவும், மேல்கீழாகவும் புரட்டப்பட்ட பெருந்தலைவர்கள் ஏராளம்! ஏராளம்! அதற்கு மூப்பனாரும், சிதம்பரமும் மட்டும் நெறிவிலக்கானவர்களாக இருந்துவிட முடியாது. அவதூறு சட்டத்தைத் தம் ஆண்டை இராசீவின் தூண்டுதலால் தாம் சட்டாம் பிள்ளையாக இருந்து அறிவித்து விட்டு, இராசீவுக்கு வந்த அளவற்ற கடுமையான எதிர்ப்புகளால், எய்தவனின் அம்பாக ‘அம்போ’ என்று வீழ்ந்து கிடக்கும் அவரின் அவல நிலையை அவர் உணர்ந்து கொள்ளாத’