பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

293


 
தமிழரசன் தம்பிகளுக்கு!


மிழகத்தின் இன எழுச்சிக்கும், பார்ப்பனிய எதிர்ப்புக்கும் இந்துமதத் தாக்கத்திற்கும் வித்திட்ட தந்தை பெரியார் அவர்கள் தாம், தனித்தமிழ் நாட்டுக் கொள்கையினையும் முன்னெடுத்தார். தொடக்கத்தில் திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்திய அவர், பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்னும் தமிழ்த் தேசிய இன விடுதலைக் கொள்கையை முன் வைத்தார். ஆனால் அக்கொள்கை, திராவிட இயக்கக் கொள்கையின் அரசியல் பிரிவினராகிய அறிஞர் அண்ணா அவர்களின் கட்சியினராலேயே, பெரியார் காலத்திலேயே, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. எனவே பெரியார் அவர்கள் தம் இறுதிக் காலம் வரை, தன்னந்தனியராகவே இருந்து, தமிழ்நாட்டுக் கோரிக்கைப் போராட்டதையும் கூட நடத்தாமல் தறைந்து போனார்.

ஆனால் அவரின் இறுதிக்கால முதலே. நம் தென்மொழி தொடங்கப் பெற்ற நாளிலிருந்தே, நீர்த்துப் போன, அத்தனித்தமிழ் நாட்டுக் கொள்கையினை மறைந்து போகாமலும், தமிழ் மக்கள் மறந்து போகாமலும் நாம் காத்து வந்தததுமன்றி, சிறிது சிறிதாக அதற்கு வலிவூட்டியும் வந்திருக்கிறோம். என்று இங்குக் குறிப்பிட வேண்டியிருப்பதற்குப் பெருமைகொள்கிறோம். இதெற்கெனப் பல படிநிலைகளையும் வேறான அணுகுமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டியிருந்தது.

தமிழின மக்களுக்குப் பெரியார் காலத்திலேயே இருந்த தலையாய மன மயக்கங்கள் மூன்று. ஒன்று மொழிபற்றியது. ஆரியப் பார்ப்பனீயம் எவ்வாறு இனநிலையில் தமிழர்களிடம்