பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

295

எவ்வாறு ஆரியர் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே, தமிழம் (தமிழ் மொழி) அவர்களால் 'திராவிடம்’ என்று குறிக்கப் பெற்றது. பின்னர் அது. தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன. அல்ல, இந்து மதம் ஓர் இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று, தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று, எனவே தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட் வேண்டியவராகவும் ஆயினர் - இங்கு கவனிக்க;

தமிழ் வழக்கு ஆரியவழக்கு
தமிழ் தமிழம்,திரமிளம், திராவிடம்,
தமிழர் திராவிடர்
சிவனியம் சைவம்
மாலியம் வைணவம்


தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும், கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூல மொழி என்று ஏற்றுக் கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக் கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.

எனவே, ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்னும் பெரியார் கொள்கையில் நாம் சில திருத்தங்களையும் மாறுதல்களையும் செய்து அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் முதலாவது, சமசுக்கிருதம் தவிர்த்த தூய தமிழ் வழக்கு (தூய தமிழைப் பெரியார் தொடக்கத்தில்- மறைமலையடிகளாரின் தொடர்புப் பயனால் ஏற்றிருந்தாலும், பின்னர் படிப் படியாய்த் தமிழ் மேல் கொண்டிருந்த கொள்கைகளைத் தவிர்த்து- இறுதியில்