பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

வேண்டும் விடுதலை

தமிழையே ஒரு காட்டு மிராண்டி மொழி என்று சாடவும் செய்தார். இதையும் தென்மொழியின் தொடக்கக் காலத்தில் நாம் விளக்கவும் சிக்கறுக்கவும் வேண்டியிருந்தது) இரண்டாவது, திராவிடம் என்னும் சொல்லைத் தவிர்த்துத் தமிழர் அல்லது தமிழினம் என்னும் இனநிலை விளக்கக் குறிப்பு. இவையிரண்டையும் ஏற்கனவே பெரியாரைப் பின்பற்றி வந்த தமிழினத்தவர்கள் எதிர்த்தனர். முகஞ்சுழித்தனர். ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். ஏனெனில், முன்னரே , திராவிடம் என்னும் பெயரால். தங்கள் இயக்கங்களில் ஒன்றி நிற்கும் தெலுங்கரையும். கன்னடியரையும் இந் நிலை வேறு பிரித்து, அகற்றி விடுமோ என்று அஞ்சினர். நல்ல வேளை இத்திராவிட இயக்கங்களில் மலையாளியர் மிகுதியாகச் சேர விரும்பவில்லை. ஏனெனில் மலையாளியா பழஞ் சேர நாட்டினராகலின், அவர்கள் பழந்தமிழ் மரபின் உணர்வினராக இருந்ததால், வேறு திரிபுத் தமிழராகிய திராவிட இனத்தவருடனும், இற்றைத் தமிழர் எனப்பெறும் கலப்பு இனத்தவருடனும் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. (முன்னாள் முதல்வர் ம.கோ. இரா. வின் செய்தி வேறு வகையானது; வேறானது) ஆனால் , பெரியாரின் தலையாய கொள்கை தனித்தமிழ் நாட்டுக் கொள்கையே ஆதலால், அதை நாம் கைவிட முடியாததாகப் போனது. எனவேதான் பெரியாரின் நேரடியான கொள்கை வழியினர்க்கும் நமக்கும், பெரியார் காலத்திலிருந்தே ஒரு பொருந்தாமை உணர்வும் புலத்தல் நடைமுறையும் இருந்து வந்தன, இருந்தும் வருகின்றன.

இனி, பெரியாரின் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையை அவரினும் வலிவாகவும் பொலிவாகவும் மெய்ம்மையாகவும் நாம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால், மூன்றாவதாக அவரின் இன்னொரு கொள்கையினையும் நாம் கைநெகிழ்க்க வேண்டியிருந்தது. இது அவரின் இறைமறுப்புக் கொள்கை.

இறைமை மறுப்பு என்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் இறைமை என்பது உண்மை. உண்மையை எப்பொழுதும் கொள்கை அளவில் சுருக்கிப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழர்தாம் இறைமையை உலகுக்கு உணர்த்தியவர். ஆரியர் அல்லர். ஆரியர்க்கு இறைக் கொள்கை கிடையாது. பூதவியல் கொள்கையே அவர்களுடையது. இக்கொள்கை ஆரியர்கள் பரப்பியது என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டுதான் பெரியார் இதை எதிர்த்ததாகக் கொள்ள இடமுண்டு. இன்னும் உலக இனங்களில் இன்றுள்ள