பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

வேண்டும் விடுதலை

ஆகவே, தனிநாட்டு விடுதலை முயற்சியில் ஈடுபட்டு உழைக்கவும் போராடவும் முன்வரும் இளைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் உண்மையான தூய தமிழ் உணர்வு கால் கொள்ளுதல் மிக மிக வேறு எவற்றையும் விட - இன்றியமையாதது என்பதை நாம் முதற்கண் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்க. இவ்வுணர்வின்றி, ஈடுபடும் எந்த இளைஞரும் அறிஞரும் தலைவரும் தமிழினத்தை முன்னேற்றவும், தமிழ்நாட்டை விடுதலை செய்யவும் இயலவே இயலாதென்க, அவ்வாறு ஒரு வேளை இற்றை நாள் விளைவேறி, வெளியேறிவரும் கருவிகளைக் கொண்டு, போராடி வெற்றி பெற்றுத் தனித் தமிழ் நாட்டைப் பெற்றாலும், அது மீண்டும் ஆரியத்திற்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் என்பதைக் கடந்த மூவாயிரம் ஆண்டுக்காலத் தமிழ், தமிழின தமிழ்நாட்டு வரலாறுகளையும், உலக நாடுகளில் விடுதலை வரலாறுகளையும் உணர்ந்தவர்கள் தவிரப் பிறர் எவரும் மாறுபட்டும் வேறுபட்டுமே இயங்குவர். இறுதியில் மீண்டும் ஆரியத்துக்கும் அடிமைப்பட்டே கிடப்பர் என்பதை உறுதியாய் நெஞ்சில் நிறுத்துக.

இனி, தனித்தமிழ் நாட்டு விடுதலை என்பதை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமே இளைஞர்கள் கருதிக்கொள்ளக் கூடாது. இது வெறும் அரசியல் விடுதலை மட்டுந்தான் என்றால், இப்பொழுதுள்ள இந்திய அரசியல் சட்டதிட்டங்களுக்குட்பட்டே தமிழக ஆட்சியை மட்டுமே நாம் அடைந்து விட்டால் போதும்; நம் இனத்தையும் நாட்டையும் மொழியையும் நாம் முன்னேற்றி விடலாம் என்று கருதுகிற அளவில் நம் கொள்கை நிறைவு பெற்று விட முடியும் முழுவதுமாக இல்லையேனும் ஓரளவாவது தொடக்கத்திலும், பின்னர் படிப்படியாக முழுமையும் நம் இலக்கை அடைந்து விடலாம் என்று நம் அரசியல்காரர்கள் சிலர் கருதி முயன்று வருவதை நாம் அறிவோம், அவ்வளவில், அவர்கள் அரசியல் வழிப் போராட்டமே முயற்சியே - போதும் என்று கருதி, அதற்குத் தேர்தலே வழி, என்றும் கூறி வருகிறார்கள்.

தேர்தல் என்பது ஒரு நல்ல அரசியல் அதிகார மாற்றுக் கருவிதான். அக்கருவி கையாளப் பெறுபவர்களின் கைகளுக் கேற்ப பெருமை பெறுகிறது; அல்லது இழிவடைகிறது. இந் நாட்டைப் பொறுத்த வரையில் அது பட்டிருக்கிற இழிவுக்கு- அல்லது தாழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனினும், அதன் வழியாகத்தான் அதிகராங்கள் கை மாற வேண்டி உள்ளது. என்ன செய்வது? எனவே, அரசியல் அதிகார மாற்றத்தை இதன் வழியாகச் செய்து