பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

வேண்டும் விடுதலை

ராம்நரேசு யாதவ் ஆட்சியேறிய வடப்பைதிரம் (உத்திரப்பிரதேசம்) பாடிபாசு பட்டேல் முதன்மை தாங்கிய குசராத், ம.கோ. இரா. (எம். சி. ஆர்) தலைமை பூண்ட தமிழ்நாடு (2-ஆம் முறை) பெய்ரான் சிங்சேக் ஆளுமை செய்த இராசத்தான் ஆகிய மாநிலங்களும், அதன் பின்னர் 1983 இல் கர்பூரிதாகூர் ஆட்சியேற்றிருந்த பீகார், டி. இராமச்சந்திரன் ஆட்சிக் கட்டிலேறிய புதுச்சேரி ஆகிய மாநிலங்களும், மீண்டும் 1984 - இல் தர்பராசிங் தலைமையிலான பஞ்சாப், நர்பகதூர் பண்டாரி வீற்றிருந்த சிக்கிம், பரூக் அப்துல்லா ஆட்சி பூண்ட சம்மு காசுமீர், என். டி. இராம இராவ் தலைமை தாங்கிய ஆந்திரா ஆகிய மாநிலங்களும் அவ்வம்மையாரின் வெறுப்புக்கு ஆளாகி அடித்து வீழ்த்தப்பட்டன.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வரலாறுகளை அறிந்த அரசியல் பார்வையாளர் எவரும். இவ்வீழ்ச்சிக் கதைகளை ஞாயம் என்று மதிப்பிட்டு விட முடியாது. அத்துணை அழிம்புகளின் மேல் கட்டப் பெற்று வருகின்ற வல்லதிகார ஆடம்பரப் பெருமாளிகைதான் இராசீவின் பரம்பரை ஆட்சி அரண்மனை. இந்த வகையில் தாய்க்குப் பிள்ளை சளைத்ததில்லை என்பதை ஆட்சிக் கவிழ்ப்பால் மட்டுமன்று, கருப்புச் சட்டங்களாலும், கடுமையான ஆட்சியதிகார ஊடுருவல்களாலும் மெய்ப்பித்து வருபவர் அவர். பஞ்சாபில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி! ஆனால் மூன்று ஆண்டுகள் வரை அதைத் தொடர்ந்து நடத்த, தனி அரசியல் கருப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டது, இராசீவ் ஆட்சி!

தமிழகத்தில் பஞ்சாபைப் போன்ற ஒரு நிலை எப்பொழுதுமே வந்ததில்லை. இருப்பினும் 1988 ஓராண்டு முழுவதும் குடியரசுத் தலைவர் பெயரால் ஆளுநர் ஆட்சி நடத்தப் பெற்றது. தமிழகத்தை நிலையான அடிமைத் தளையில் வைத்திருக்க - பேராயக் கட்சி ஆட்சியை வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணிக்க இங்கே பல வகையிலும் பலகோடி உருபா செலவு செய்து, முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் இராசீவ் 12 தடவைகள் இங்கு வந்திருக்கிறார். அவர் வரவுக்காக ஒரு தடவைக்கு 6 கோடி முதல் 7 கோடி உருபா வரை செலவிடப் பெற்றிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசு பணம். அஃதாவது மக்கள் வரிப்பணம். இத்தேர்தல் பணி ஓர் இந்தியத் தலைமையமைச்சரின் பணியன்று. இருப்பினும் இவர் மாவட்ட ஆட்சித் தலைவர்போல், மாநில ஆட்சியைக் கைப்பற்ற் செயல்பட்டார். இங்குள்ள கட்சித் தலைவர்கள்