பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

வேண்டும் விடுதலை

காரணத்தினால் தி.மு.கவை ஆட்சியில் அமர வைத்தனர். கலைஞர் ஆட்சிக் கட்டிலேறினார். அன்றிலிருந்து இராசீவும் அவர் கட்சிக் கேடயங்களும் ஒன்றைப் பார்த்து ஒன்று பொருமிக் கொண்டன; கருவிக் கொண்டன; பற்களை நறநறவென்று மென்று துப்பிக் கொண்டன. 'உன்னால்தான் நான் கெட்டேன்; என்னால் தான் நீ கேட்டாய் - என்றெல்லாம்' அவை கூறின: அம்பல் தூற்றின. ஆனால் காலப்போக்கில், “இனி விளைந்ததைக் கொட்டி அளந்து கொண்டிருப்பதில் பயனில்லை; விளைவிப்பதைத் தாறுமாறாக்குவோம்; சிதைப்போம்; ஆக்கிய சோற்றுச் சட்டியை உடைப்போம்” என்று மறைமுக உறுதியெடுத்துக் கொண்டு, சட்டமன்றத்தில் புதிதாகக் கால் வைத்த ஆரிய மாரீசையையும் அவருக்குப் பக்க மேளங்களாக உள்ள திருநாவுக்கரசு, சாத்தூர் இராமசந்திரன், குமரிஅனந்தன், இராதா, அண்ணாநம்பி, செங்கோட்டையன் இன்னோரன்ன வீடணப் பிரகலாத சுக்கிரிவப் பிறப்புகளையும் தூண்டிவிட்டு, முதலமைச்சர் கலைஞர்க்கு முன்னாக நின்று முரண்டு பிடிக்கவும், முடிந்தால் முரட்டுவலி காட்டவும், இன்னும் முடிந்தால் கலைஞர் மூக்கை உடைக்கவும் (இங்கு மூக்குடைப்பை மானக்கேடு செய்தல் என்னும் பொருளில் கொள்க) திட்டம் இடப்பட்டது; திட்டமிட்டபடி உணர்ச்சித் தூண்டல்கள், வாய்க் கொப்பளிப்புகள், செயலிழிவுகள் முறைப்படி கடந்த 25-3-89 இல் சட்டமன்றத்தைக் களரி மன்றமாக்கின.

அடுத்து, மக்கள் மன்றத்தில் அ.தி.மு.கவினரும், இந்திராப் பேராயத்தினருமாகச் சேர்ந்து இல்லாத பழிகளைச் சொல்லாத சொற்களால் கலைஞர் மேலும், அவர் ஆட்சி மேலும் ஏற்றிக் கூறினர். இவ்வாறாக மக்களால் அரியணையேற்றப் பெற்ற தி.மு.க.வை இராசீவ் ஏதோ ஒரு காரணம் காட்டி இறக்கிக் காட்டப் பார்க்கின்றார். இத் திரைமறைவு நாடகத்தின் இறுதிக் காட்சி எப்படியிருக்கும் என்று இப்பொழுது கூற முடியவில்லையானாலும், இராசீவுக்குக் கட்டியங்காரராக இருந்து கோமாளிக் கூத்து நடத்தும் தஞ்சை நிலக்கிழார் மூப்பனாருக்கு ஒன்று சொல்லிக் கொள்வோம்.

"இந்திய மாநிலச்சட்ட மன்றங்களில் அடிதடிகள், செருப்பு வீச்சுகள், ஒலிவாங்கிகளைப் பிடுங்கியடித்தல்கள் போன்ற செயல்கள் பொதுவான நிகழ்ச்சிகளாகிவிட்டன. ஏன், பாராளுமன்றத்திலேயே இவை போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப் பொழுது நடப்பது இயல்பாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் ஆந்திராவிலும்,