பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

311


 
மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ
இந்திய ஒருமைப்பாட்டை
உருவாக்கிவிட முடியாது!

ந்தியா பல்வேறு தேசிய இன மக்களைக் கொண்ட நாடு என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அத்தனைத் தேசிய இன மக்களுக்கும் தனித்தனியான மாநிலங்கள் அமைக்கப் பெறவில்லை. முகாமையான சில தனி மொழிகளையும், அவற்றைப் பேசும் இனங்களுக்குமே, அவற்றின் தனித்தனியான கலை, பண்பாடு நாகரிகங்கள் ஆகியவற்றின் பின்புலங்களைக் கொண்டு, தனித்தனி மொழி மாநிலங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இவையும் ஆட்சி எளிமையைக் கருத்தில் கொண்டே, அரசியல் முறையில் பிரிக்கப் பெற்றுள்ளனவே தவிர, அந்தந்த மொழியின மக்களின் தனித்தன்மையான நலன்களைக் கருதி அமைக்கப் பெற்றனவல்ல. இந்த நாட்டுக்கு விடுதலை வழங்கியபொழுது, இதனை முன்னாள் ஆண்ட வெள்ளையர்கள், தெரிந்தோ தெரியாமலோ, இந்நாட்டை ஆரியப் பார்ப்பன முதலாளியர்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். அவர்களே தங்கள் விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் சுரண்டலுக்கும் மேலாளுமைக்கும் பொருத்தமாக இந்த மொழி மாநிலங்களைப் பிரித்தமைத்தார்கள். எனவே இவை இந்தியத் தேசிய இனங்களுக்கான முழுமை மாநிலங்கள் அல்ல. இந்தியத் தேசிய இனச் சிக்கல் படிநிலை