பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

வேண்டும் விடுதலை


 
நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய
ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று!


ந்தியத் தலைமையமைச்சர் தமிழினத்தைப் பொறுத்த அளவில் மிகமிக விழிப்பாகச் செயல்படுகிறார். எங்கு தமிழீழத்தில் விடுதலைப் போராளிகளின் கை ஓங்கி விடுமோ என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளார். தமிழீழத்தில் அமைதியை உண்டாக்க என்று ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் இந்தியப் படைகளைக் கொண்டு, மிகவும் கரவாக, விடுதலைப் புலிகளின் பேரெதிர்ப்பை ஒழித்துக் கட்டுகிற முயற்சியைச் செய்தார். புலிப்படையின் பெரும் பகுதியை மிகவும் கொடுமையாக அழித்தார். அமைதியை ஏற்படுத்த என்றும், ஆட்சியாளர்க்கு உதவுவது என்றும் படைகளை ஓர் அளவில் திரும்பப் பெறுவது என்றும் - அவர் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இலங்கைத் தமிழர்களுக்கு மாறானதாகவே இருந்து வருகிறது.

இலங்கையின் தலைமை நிலையில் செயவர்த்தனே மாறியதையும் பிரமதேசா வந்ததையும் கூட அவர் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே ஆக்கிக் கொண்டார். அண்மையில், இந்திய அரசின் எந்தத் தலையீடும் இன்றி, இலங்கை அதிபர் பிரமதேசாவும் விடுதலைப் புலிகளின் படிநிகராளிகளான அரசியல் கருத்தாளர், இலண்டன் பாலசிங்கமும், அரசியல் பிரிவுத் தலைவர் யோகியும், கிளிநொச்சி பகுதித் தலைவர் மூர்த்தி வலித்தும், லாரன்சும், திருவாட்டி பாலசிங்கமும் இலங்கை ஆட்சி