பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

வேண்டும் விடுதலை

இணைந்து, என்றென்றும் தாங்களே தங்கள் பிறங்கடைகளே ஆண்டு வரலாம் என்று நன்கு திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு வருகின்றன. இத் தில்லுமுல்லுகளுக்கும் திருட்டு, சூழ்ச்சி, ஏமாற்றுத்தனங்களுக்கும் ஒட்டுமொத்தமாகத் தரப்படும் பெயர்களே இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசிய நீரோட்டம் என்பவெல்லாம். இவை என்னவோ உலகக் கண்ணோட்டம், மக்கள் நலம் கருதிச் சொல்லப்படுவனவாகச் செயல்படுவது இன்னொரு வகை ஏமாற்றே!

இந்நிலையில் நாமும் அதே உணர்வுடன் நம் நோக்கத்தை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது. நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று. இன நிலையில் ஆரியத்தையும், பொருள் நிலையில் முதலாளியத்தையும், மொழி, கலை, பண்பாட்டு நிலையில் இந்தி, சமசுக்கிருதத்தையும், ஆட்சி அதிகார நிலையில் வடநாட்டு வல்லதிகாரத்தையுமே ஆகும். இவ்வத்தனையும் இணைந்ததுதான் இந்திய ஒருமைப்பாடு என்றால், நாம் தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையையே முன்வைக்க வேண்டும். அதற்காகவே போராடவும் வேண்டும்.

— தமிழ்நிலம், இதழ் எண். 121, மே, 1989