பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

331


 
தேர்தல் வேண்டுகை!


டந்த இரண்டாண்டுகளில் இந்திய அரசில் குழறுபடிகளும் கூத்தடிப்புகளும் சண்டை சள்ளுகளுமே நடந்து வருகின்றன. நல்லவர்களாலும் ஆட்சி செய்ய முடியவில்லை. வல்லவர்களாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. கொள்கை உள்ளவர்களின் ஆட்சியும் கவிழ்க்கப்படுகிறது; கொள்கையற்றவர்களின் ஆட்சியும் கவிழ்க்கப்படுகிறது. பதவிச் சண்டைக்காரர்களும், பகல் கொள்ளையடிப்பவர்களுமே மேலாங்கி நிற்கின்றனர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்ற இராசீவ், செயலலிதா, தேவிலால், சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றார்கள்.!

வி. பி. சிங் அரசைச் சந்திரசேகர் இராசீவுடன் சேர்ந்து கவிழ்த்தார். 11 மாதங்களே ஆட்சியிலிருந்த வி. பி. சிங்கை, அவர் மண்டல் குழு அறிக்கையைச் செயலுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார் என்பதற்காகவும், அத்வானி, வாச்பேயி முதலிய பச்சைப் பார்ப்பனப் பதடிகள் தலைமையேற்றிருக்கும் பாரதீய சனதா, விசுவ இந்து பரிசத், ஆர். எசு. எசு. போன்ற இயக்கங்கள் கொண்ட இராமர் கோயில் சிக்கலுக்காகவுமே வி. பி. சிங் என்னும் நேர்மை மாந்தர் அரசு கவிழ்க்கப்பட்டது.

அந்நிலையில், மக்கள் சாய்காலை இழந்த பல ஊழல்கள் புரிந்த முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் கரவான முறையில் வஞ்சக மனத்துடன் சாணக்கிய சூழ்ச்சி செய்து , குரங்கு தன் குட்டியின்