பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

347

தமிழ்நாட்டுக்கு 2050 கோடி கன அடி (அஃதாவது 205 டி.எம்.சி.) தண்ணீர் விடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகத்தான் அது செல்லாது என்று கர்நாடகம் பங்காரப்பா சட்டமன்றம் ஒரு தீர்மானத்தையும் ஒரு புதுச்சட்டத்தையும் போட்டது.

அதன் பின்னர் நடந்த கதைதான் அனைவருக்கும் தெரியும்.

நடுவர் மன்றத் தீர்ப்பைப் பங்காரப்பா கடுமையாக எதிர்த்தார். நடுவணரசு அதை உச்சநீதிமன்றக் கருத்துரைக்கு அனுப்பியது; அது, நடுவர் மன்றத் தீர்ப்பு சரியென்றும், கர்நாடகம் அதையெதிர்த்துச் சட்டம் இயற்றியது தவறென்றும் கூறியது; நடுவணரசு அதை அரசிதழில் (கெஜட்டில்) வெளியிட்டது.

அது வெளிவந்த நாளிலிருந்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை, தீவைத்தல் முதலிய கொடுமைகள் கன்னடக் காடையர்களால் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இது காவிரி நீர்த் தீர்ப்புக்கு எதிராக எழுந்த போராட்டம் அன்று என்பதை அது தொடங்கிய மூன்று, நான்கு நாள்கள் நிகழ்ச்சிகளே காட்டி விட்டன.

இது திட்டமிட்டுத் தமிழர்களின்மேல்; தமிழினத்தின் மேல் நடக்கின்ற ஓர் இனப்படுகொலையே ஆகும்.

ஆயிரக்கணக்கில் தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் புடைவைகளை அவிழ்த்துவிட்டு அவர்கள் அம்மணமாகவே விரட்டப்பட்டுள்ளனர்.

இக்கலவரங்களால் 2000-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையர்கியுள்ளன. ஓரிலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத்தேடி தமிழகத்திற்குள் தங்கள் உடைமைகளையும் வீடு வாசல்களையும் விட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள வந்துள்ளனர். இன்னும் வந்த வண்ணமாகவே உள்ளனர்.

இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தியது பங்காரப்பாவின் மேலுள்ள கடுமையான குற்றமாகும். அதற்காகவே அவரைப் பல தண்டனைகளுக்கும் உள்ளாக்கலாம்.

அத்துடன் அவர் தூண்டிவிட்டதன் பேரிலேயே