பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

வேண்டும் விடுதலை

தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், கடல் தனசேகரன், மணியரசன், தியாகு முதலிய துணிவும் நேர்மையும் கொண்ட தமிழினத் தலைவர்கள் மேலும் தேசவிரோதம், சதி முதலிய கடுமையான சட்டங்களைச் சுட்டிக் குற்றவாளிகளாக்கி அவர்களைப் பொறுப்பில் ளிெவராதபடி சிறைப்படுத்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கதும் எதிர்த்துப் போராடத்தக்கதுமான ஒரு கொடுமையான அடக்குமுறையாகும்.

இலங்கையில், சிங்கள அரசின் கொடுமைகளுக்கும் கொலை வெறிக்கும் இன அழிப்புக்கும் ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தங்களுக்கென்று இறைமையுள்ள ஒரு தனித்தமிழ் ஈழ நாட்டை உருவாக்கிக் கொள்ளவும், தங்கள் உயிர்களையும் மதியாது, பலவகை அழிவுகளுக்கும் இடையில் எழுந்து போராடி வரும் விடுதலைப் புலிகளாகிய தமிழினப் போராளிகளைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவர்களைக் கொடுமையாளர்கள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் கொள்ளையர்கள் என்றும் இழிவுபடுத்தி அவர்கள் இயக்கத்தை இங்குத் தடைப்படுத்தியும், அங்கு நேர்ந்த கொடுமைகளுக்குத் தப்பி இங்கு வந்த இலக்கக் கணக்கான ஏதிலி(அகதி)களை இங்கிருந்து விரட்டியடித்தும் வருகின்ற செயல்களைக் கண்டித்து அவர்களின் நேர்மையான, ஞாயமான கோரிக்கைகளை எடுத்துப் பேசுவது, எப்படித் தேசவிரோதம் ஆகும்?

பாலத்தீனர்களின் விடுதலையைப் பற்றியும், தென்னாப்பிரிக்கர்களின் அரசியல் உரிமைகளைப் பற்றியும் இங்குள்ள தலைவர்களும் நாமும் பேசவில்லையா? அங்குள்ள மக்களுக்காகப் போராடி வரும் தலைவர்களான யாசீர் அராபத்தையும் மண்டேலாவையும் நாம் வரவேற்றும், பாராட்டியும் நம் இந்திய அரசு அவர்களுக்குப் பற்பல உதவிகளையும் பரிசுகளையும் வழங்கவில்லையா? அவையெல்லாம் தேச விரோதமில்லாத பொழுது, 'சதி'யில்லாதபொழுது, தமிழீழ விடுதலையைப் பற்றியும் தம்பி பிரபாகரனைப் பற்றியும் பேசுவது மட்டும் எப்படி தேசவிரோதமும் சதியும் ஆகும்?

இனி, இவையன்றித் தமிழ்நாட்டுக்கும் தமிழின மக்களுக்கும் ஞாயமாகக் கிடைக்க வேண்டிய அரசியல், பொருளியல், மக்களியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், கருத்துகள் கூறுவதும், கோரிக்கைகள் வைப்பதும எப்படிக் குற்றமாகும்? இவையெல்லாம் குடியரசு அமைப்பிலுள்ள ஒரு குடிநாயக ஆட்சியின் நடைமுறைகள் இல்லையா? தாக்கமுற்ற ‘பாதிக்க’ப்பெற்ற மக்கள் தங்கள் இன