பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

37

அவன் இழந்த, இழக்கின்ற அரசியல் பொருளியல் குமுகாய உரிமைகளுடன், அவனின் மூலப் பொருள்களான தன்மானமும் பண்பாடும் வேறு பறிபோகின்றன. தமிழன் தான் இறப்பக் கொடுத்த வரலாறு ஏராளம்;ஈந்து ஈந்து அவன் தன் சிறப்பையே கெடுத்துக்கொண்டான்; அறவாழ்வையே ஏளனமாக்கி விட்டது தமிழனின் தன் மான இழப்பு! அவன் இனியும் ஏமாளியாக இருக்க விரும்பவில்லை. ‘சிவசேனை’ போன்ற இயக்கத்திற்குத் ‘தமிழ்ப்படை’ எவ்வகையிலும் தாழ்ந்ததன்று. மராட்டியத்தில் இருக்கும் தென்னாட்டவரை - தமிழரைவிட இங்குள்ள வடவர்கள் வலிந்தவர்களும் அல்லர். பொதிய வெற்பில் பொடியாக்கப்படும் அவர்தம் எலும்புகள், கன்னி மணலில் புதைக்கப்படுவது தமிழர்களின் மறுமலர்ச்சி வாழ்வின் தொடக்கமாக அமைவது பெருமைதரக் கூடியதே. தமிழன் தன்னை உணர்த்தக் காலம் வந்துள்ளது; நெடிதுயர்ந்த மடிதுயில் களைந்து, தமிழன் தெளிவடைந்து எழுந்துள்ளான். எழுந்ததும் தமிழக விடுதலைக் குரல் அவன் செவிகளில் படுகின்றது. பிரிவினை நோக்கி அவன் தள்ளப்படுகிறான். இடப்படும் ஆணைக்குக் காத்துக்கிடக்கும் இளைஞர் பட்டாளம் ஆட்சியினர்க்கு எச்சரிக்கை கொடுத்துப் புறப்படுகின்றது. வெற்றியை நோக்கி நடையிடட்டும் அதன் முனைப்பு!

- தென்மொழி, சுவடி : 5, ஓலை 5, 1967