பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை:


மிழ் மொழி, இனம், நாடு நலிகையில் வேறு எதனையும் பெரிதென எண்ணாமல், கருத்துரைத்துச் செயலாற்றியவர் நம் பாவலரேறு ஐயா அவர்கள்.

மொழி நமது விழி, நாடு நமது வீடு – என்கிறபடி தமிழ்நாட்டுக்கு வரும் இன்னல்களைத் தம் வீட்டுக்கு நேர்ந்த இன்னல்களாகவே கருதிப் போர்ப்பரணி பாடி வீர நடையிட்டவர் பாவலரேறு.

மறைமலையடிகளால் தொடங்கப் பெற்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களால் உரமிடப்பெற்ற தூய தமிழ்ச் செயற்பாடுகளுக்குக் களமாகவும், தனித் தமிழ்நாட்டுத் தேவையை வலியுறுத்திப் பேரியக்கம் தொடங்குகிற முயற்சிக்குப் பாசறையாகவும் ‘தென்மொழி’ செயலாற்றியது.

தந்தை பெரியார் அவர்களால் முன்மொழியப்பட்ட ‘திராவிட நாடு’ கோரிக்கைகளுக்கும், பின் அரசியல் ஆரவாரக் காரர்களால் தடம் மாற்றப்பட்டு நழுவிய ‘மாநிலத் தன்னாட்சி’ப் பேச்சுகளுக்கும், பொதுவுடைமைக்குப் பொறுப்பற்ற நிலையில் வரிந்து கொண்ட இந்தியப் பார்ப்பனியத்திற்கான கட்சிகளின் வாய்வீச்சுகளுக்கும் இடையில் தென்மொழி பதாகை விரித்துத் தனித்தமிழ்நாட்டு விடுதலைக்கு வேட்டெஃகத்தை ஏந்திப் பூட்டறுக்கப் புறப்பட வேண்டுமாய் அழைத்தது.

தமிழக வரலாற்றில் தமிழ்நிலத்தை விடுவிக்கக் கோரி மூன்று மாநாடுகளை நடத்தியதும், தமிழக விடுதலையில்