பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

53




 
பிரிவினை தவிர வேறுவழியில்லை!


மானமுள்ள தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டின் அரசியல் அமைதி பார்ப்பனரால் சீர் குலைக்கப்பட்டுவிட்டது. ஆரியப்பார்ப்பான் ஒவ்வொருவனும் இன்று நஞ்சைக் கக்கத்தொடங்கிவிட்டான். அரசியல் நிலையிலும் குமுகாய நிலையிலும் அவன் தமிழர்களில் தனக்குகந்தவர்களைத் தேடிப்பிடித்துத் துணையாக்கிக்கொள்ள முனைந்துவிட்டான். பயிற்சிமொழிச் சிக்கல் என்ற பெயரால் பார்ப்பான் தன் இனத்தை ஒன்றிணைத்து வருகின்றான். தமிழர்களிடையே தப்பிப் பிறந்த சில வீடணப் பிரகலாதன்கள், பார்ப்பானின் வீடு தேடிப்போய், அவன் திட்டத்திற்குக் கைகொடுக்க முன் வந்து விட்டனர். தம் காலில் தாமே நிற்கத் தகுதியுடையவர்களாகக் கருதப் பெற்றவர்கள் பார்ப்பான் துணையுடன் தாமிழந்த பட்டம் பதவிகளுக்காகத் தமிழர்களின் அனைத்து நலன்களையும் அடிகு வைக்க முற்பட்டு வருகின்றனர். ஆம், பேராயக் கட்சியின் தன்னலமற்ற ஒரே தலைவர் என்று பெரியார் ஈ.வே.இரா.வால் பாராட்டப் பெற்ற காமராசர் கூடத் தம் பதவி வேட்கைக்காகத் தமிழர் நல எதிரியாகிய இராசாசியுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்து விட்டார். 'கல்வியறிவற்ற கருப்புக் காக்கை' என்றும் "அரசியலிலிருந்தே கல்லால்லடித்துத் துரத்தப்பட வேண்டியவர்.' என்றும் எந்தக் காமராசரைப் பார்த்து இராசாசி நேற்றுவரை கூறிவந்தாரோ, அந்தக் கருப்புக் காக்கையுடன் இந்தப் பார்ப்பனக் கிழட்டுக் கழுகு இணையத் தொடங்கி விட்டது. 'காமராசும் நானும்