பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

75

பெரியாரைப்போல் பிறரை நம்பித்தான் காலந்தள்ள வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு வந்து விடும் போல் தோன்றுகின்றது.!

அண்மையில் கோவைத் தொழிலறிஞர் அறிவியல் முனைவர் கோ. து. (நாயுடு) அவர்களிடம் நேரில் போய், அவர் வைத்திருக்கும் வலிவுகளில் ஒரு பகுதியையாகிலும் அறிவியல் கருவிகளையாகிலும் எங்கட்குத் துணையாகத் தாருங்கள் என்று கேட்டுப்பார்த்து விட்டேன். அவ்வாறு கொடுக்காமற்போனால் எதிர்காலத்தில் அவர்கள் போன்றவர்களிடமே முதன் முதல் போராட வேண்டியிருக்கும் என்றும். அவர்களின் குவிந்த செல்வங்களையே முதன் முதலில் கரைக்க முற்பட வேண்டியிருக்கும் என்று நேருக்கு நேர் அச்சுறுத்திப் பார்த்து விட்டேன். அவர் நம் விடுதலைக் கொள்கையை முழுக்க முழுக்க வரவேற்றாராயினும் நம் உணர்ச்சியையும் முயற்சியையும் ஓர் ஐந்தாண்டுக் காலத்திற்குத் தள்ளிப்போடும் படி கேட்டுக்கொண்டார். அவ்வைந்தாண்டுக் காலத்திற்குள் நாம் விடுதலை கோருவதற்கான நோக்கங்கள் நிறைவு செய்யப் பெறாமல் போகுமானால் தாமும் நாம் தொடங்கவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறினார் அவ்வாறு கூறுவதை எழுத்தால் நான் சொல்லுகிற படி ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு என்னை எழுதச் சொன்னார் நான் எழுதியது. (தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆங்கிலப் பெயர்ப்பு பாவலர் திரு. மகிழரசனுடையது)

கோவைத் தொழிலியற் பேரறிஞரும் அறிவியல் முனைவரும் ஆகிய கோ. துரைசாமி நாயுடு அவர்கள் தென்மொழி ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனாருக்கு எழுதிக் கொடுத்த விடுதலை எழுச்சி நாள் கால நீட்டிப்பு ஒப்பந்த விளக்கம்.

தி.பி. 2003 கும்பம் 23 கி.பி. 1972 மார்ச்சு 6 ஆம்நாள் திங்கட்கிழமை, கோவை கோ. து. நாயுடு (G.D Naidu) ஆகிய நான் கடலூர் தென்மொழியிதழ் ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு, இவவொப்பந்த வரைவின் வழி, அவர் மிக அண்மையில் தொடக்கவிருக்கும் இந்திய ஆட்சியின் அரசியல், இன, மொழி, சட்ட அமைப்புகளினின்று முற்றும் வேறுபட்ட தமிழகத் தனி ஆட்சியமைப்புப் போராட்டத்தை இவ்வொப்பந்த நாளினின்று அடுத்த ஐந்தாண்டுக் காலத்திற்குத் தள்ளிப் போட வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன் அவ் வைந்தாண்டுக்