பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

77

அறிந்ததை விட நான் நன்கு அறிவேன். எனவே அவர் போன்றர்கள் நம் தமிழகப் போராட்டத்தில் ஒதுங்கியிருந்து விட முடியாது. பெரியார். ஈ. வே. இரா அவர்கள் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையைத் தமிழக அரசினர் சார்பாக நிறுத்தி வைத்துள்ளதாகச் செய்தித் தாள்களில் பார்க்க நேர்ந்தது. தி.மு.க. தலைவர்களில் ஒருவரும் முன்னணிக் கொள்கையாளருமாகிய திரு. மனோகரன் அவர்கள் தம் கட்சி நாட்டுப் பிரிவினையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டதாகப் பேசியதையும் படிக்க நேர்ந்தது. இச்செய்தி எவ்வளவில் உண்மையோ நமக்குத் தெரியாது. அப்படியே உண்மையாக இருந்தாலும் ‘இஃதெல்லாம் ஓர் அரசியல் தந்திரம்’ என்று அடங்கிப் போகவும் முடியாது. அப்படித் தேற்றிக் கொண்டு நம்பிக் கிடப்பவர்களைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. திரு மனேகரளைப் பொறுத்தவரை தமிழகப் பிரிவினை தேவையில்லாமல் இருக்கலாம்; ஏனெனில் அவர் ஒரு மலையாளி;” அல்லது திரு. கோ. து. நாயுடு அவர்களைப் பொறுத்தவரை தமிழகப் பிரிவினை தற்காலிகமாகவோ, நிலையானதாகவோ தள்ளிப் போடக் கூடியதாகவோ தள்ளிவிடக் கூடியதாகவோ (அவர்க்குத் தனிப்பட்ட நிலையில் நன்மை வருகிறபொழுது) இருக்கலாம்; ஏனெனில் அவரும் ஒரு தெலுங்கர், அப்படியே தான் பெரியாரையும் கருதிக் கொள்ள வேண்டியிருக்குமா என்பது தான் நமக்குத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவர் ஒரு கன்னடியர் என்பதையும் மறந்து. இந்தத் தமிழர்களுக்காக தமிழரோடு தமிழராய் ஓர் அரை நூற்றாண்டுக் காலம், உரிமையுணர்வுக்கு எருவிட்டும், விடுதலை எழுச்சி தழைக்கவும் பாடுபட்டாரே, அவரையும் அப்படித்ததான் கருதிக் கொள்ள வேண்டியிருக்குமோ என்பதை அவர் தான் நமக்கு விண்டு விளக்க வேண்டும்.

எவரோ, எப்படியோ, இனியும் நாம் சாக்குப் போக்குகள் காட்டிக் காலத்தை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்படியிருக்கக் கூடவும் கூடாது. வடநாட்டினரின் வல்லாட்சி ஒரு சார்பு அதிகார உரிமை தமிழர்களையும், தமிழர் தம் பண்பாட்டு வளங்களையும் பூண்டோடு அழித்து, அவர்களை என்றென்றும் மொழி இன, பொருளியல், அரசியல் அடிமைகளாக அழுத்திவைத்துக் கொண்டிருக்கும் கரவு சான்றது, அதற்குத்தக சட்டங்கள் மாற்றி அமைக்கப் பெறுகின்றன; அரசியல் நடை முறைகள் தலை கீழாக்கப்படுகின்றன; நிலக் கூறுபாடுகள் பூசி மெழுகப் படுகின்றன. இவற்றின் இடிபாடுகளுக்கிடையில்