பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

81

விளைவுகள் எத்தனையோ உள மொழியைப் பொறுத்தவரையில் இதன் முழக்கங்கள் எவ்கையான போராட்டமுமின்றி ஓரளவு வெற்றி பெற்று வருகின்றன என்று கூறி மகிழலாம். ஆனால் இனத்தைப் பொறுத்த அளவில் இதன் நோக்கம் ஓர் இம்மியளவும் நிறைவேறியதாகக் கூற முடியாது. ஏனெனில் தமிழனின் வரலாறு அத்துணை இறுக்கம் வாய்ந்த ஓர் அடிமை வரலாறாக ஆக்கப்பெற்றுக் கிடக்கின்றது. இவ் விறுக்கத்தை இலக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. அவ்வாறு எடுத்துக் கொண்ட தலைவர்கள் பலர். இன்னும் அத்தகைய முயற்சி நடந்து கொண்டே இருக்கின்றது. இவ்விடத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. தமிழனின் வரலாறு பிற நாட்டவனின் பிறநாட்டவன் ஏதோ ஓர் இனத்தானிடம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் அடிமைப்பட்டுக் கிடந்திருப்பான். ஆனால் தமிழனின் அடிமை வரலாறு ஏறத்தாழ மூவாயிரமாண்டுத் தொடர்கதை. இவனின் ஆண்டைகள் பல பேர் ஒவ்வோர் இனத்தானிடமும் இவன் மாறி மாறித் தொழும்பு வேலைகள் செய்திருக்கின்றான். இக்கால் இவனுக்கு ஆண்டையாக வந்து அமர்ந்தவன் வடநாட்டான். அதிலும் ஆரியப் பார்ப்பான். இவனிடத்திலிருந்து இவன் தன்னை விடுவித்துக் கொள்வது அவ்வளவு எளியதன்று - சட்டத்தாலும் அதிகார நெருக்கத்தாலும் பொருளியல் முட்டுப் பாட்டாலும் இவன் அடிமைத்தனம் மூச்சு முட்டக் கிடக்கின்றது. இவன் தன்னைத்தானே அடிமைப்படுத்திக் கொண்டு கிடக்கின்ற நிலைகள் வேறு. அவை இவனை என்றும் உயர்த்திக் கொள்ளாதபடி அழுத்திக் கொண்டுள்ளன. இத்தனைக்கும் மீறி இவனை அவற்றினின்று விடுவிக்கும். ஒரு பேராற்றல் வாய்ந்த ஒருவனை எந்த ஆற்றலாலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவனை எத்தகைய கொடுமைகளுக்கும் ஏச்சுப் பேச்சுகளுக்கும் அஞ்சாத அசையாத ஒருவனை எவ்வகையான பற்றுப் பாசங்களுக்கும் அடிமைப்படாத ஒருவனை-எத்தகைய அகப்புறப் பகையுணர்வுகளுக்கும் சலிப்படையாத ஒருவனைத் தமிழகம் எதிர் நோக்கிக் கொண்டுள்ளது. அவனே தமிழக அடிமை வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டி யவனாவான். ஆனாலும் அத்தகைய ஒருவனும் நம்முடைய வயிற்றினின்று தான் தோன்றித் தீர வேண்டும். எனவே இன்றைக்குப் புடைத்தெழும் நம்நாடி நரம்புகளின் வேகம் நாளைக்கு அப்படிப்பட்ட ஒருவனைச் சமைத்துக் கொடுக்காதா என்று எண்ணி நான் அங்காந்து அலமந்து கிடக்கின்றேன். அதன் முடிவாகவே இவ்வளவு நாட்கள் என் எண்ணங்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வெடித்துச் சிதறின. பொங்கிப் புடைநிரம்பின.