பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வேண்டும் விடுதலை

வகையில் உருமாறி உயிர்வாழ்ந்து வருகின்றது. உலகில் வேறெம் மொழிக்கும் இல்லாத மூவகைப் பாகுபாடும். ஐவகை இலக்கணமும். எண்வகைச் சிறப்பியல்புகளும் கொண்ட நம் தமிழ்மொழியை ஆரியத் தளையினின்றும் பிறமொழிச் சிதைவினின்றும் மீட்டுக் காத்து வருவது தமிழர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இன்றோ, நம் தாய்மொழி ‘தமிழ்’ என்று கூறவும் வெட்கப்பட்டு நிற்கின்றோம். “தமிழில் என்ன இருக்கின்றது” என்று நமக்குள் நாமே ஒரு முழு மூடத்தனமான கேள்வியை எழுப்பிக் கொண்டு, ஆங்கில மொழிக்கும். பிற வட நாட்டு மொழிகளுக்கும் வால் பிடித்துக் கிடக்கின்றோம். நம் மொழியைத் தமிழ் என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்ள முடியாத நாம், நம்மைத் தமிழரென்றும் கூறிக்கொள்ளத் தயங்குகின்றோம். நமக்குள் பல குலப்பிரிவுகளையும் கிளைப் பிரிவுகளையும் உண்டாக்கிக் கொண்டு, நம்மை நாமே அடையாளங் கண்டு கொள்ள முடியாதவர்களாக-நமக்குள் நாமே அடையாளங் கண்டு கொள்ள முடியாதவர்களாக- நமக்குள் நாமே பகைமை பாராட்டிக் குத்திக்கொண்டும் வெட்டிக் கொண்டும் சாகுமாறு பலவகைப் பூசல்களை உருவாக்கி வருகின்றோம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல். மொழியாலும் அதன் வழி இனத்தாலும் வேறுபட்டுக் கிடக்கும் நம்மை, மொழியாலும் இனத்தாலும் தென்னாட்டு ஆரியம் பார்ப்பானும் பொருளாலும் அரசியலாலும் வடநாட்டு ஆரியப் பார்ப்பானும் ஏமாற்றி, அடிமைப்படுத்திக் காலங்காலமாய்ச் சுரண்டி வருகின்றனர்.

'சமசுக்கிருதம் இல்லாமல் தமிழ் இல்லை', 'சமசுக்கிருதமே இந்திய மொழிகளுக்குத் தாய்; அதுவே இந்திய ஒற்றுமைக்கு வழியமைத்துக் கொடுக்கும்' - என்றபடி இந்தியக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அனைத்து ஆரியத் தலைவர்களும் நாளுக்கு நாள் ஊருக்கு “ஊர் உரத்த குரலில் முழங்கி வருகின்றனர். ஆளைக் கண்டு' ஏமாறி வரும்” நம் அடிமைத் தமிழர்களும் நம் பெறுதலரிதாம் தமிழ் மொழியைப் புறக்கணித்துத் தம்மைத் தாழ்த்தியும் நம் இனத்தை வீழ்த்தியும் வருகின்றனர்.

இவ் வீழ்ச்சி நிலைகளினின்று தமிழன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் அவன் தன் தாய்மொழியாகிய தமிழைத் தூய்மையாகவும், பிறசொல் கலப்பின்றியும் பேசிவருவதுடன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒரு தாய்