பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

89

வயிற்றுப் பிள்ளைகளைப் போல் குல, சமய, வேற்றுமைகள் இன்றி ஒரே குமுகாயமாக வாழவும் முயற்சி செய்ய வேண்டும்.

தமிழனின் நிலவிடுதலை:

உலக அடிமை வரலாற்றில் தமிழனின் வரலாறு மிகவும் இரங்கத் தக்கதான ஓர் இழிந்த வரலாறாகும். பிற நாட்டு இன அடிமைகள் அனைவரும் அரசியல் அடிமைகள் அல்லர், இனத்தால் அடிமைப்பட்டு அரசியலால் உரிமை பெற்ற மக்களும் உள்ள தமிழன் இனத்தாலும் அரசியலாலும் அடிமை பட்டுக் கிடக்கின்றான்.

பிற அடிமை இனங்கள் ஏதோ ஓர் இனத்தால் மட்டுமே அடிமிைப்படுத்தப்பட்டுக் கிடக்கின்ற வேளையில், தமிழினம் பல்வேறு இனங்களால் அடிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.

பிற இனங்கள் ஏதோ ஒரு குறுகிய கால எல்லைக்கு அடிமையுற்றுக் கிடப்பதும். பிறகு எழுச்சியுற்றுப் போராடி உரிமை பெறுவதும் வரலாறு, தமிழினமோ கடந்த மூவாயிரமாண்டுகளாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து அடிமையுற்றே கிடக்கின்றது. அதன் வரலாறே அடிமை வரலாறாகும்.

ஆரியரிடத்தும், மொகலாயரிடத்தும், பல்லவரிடத்தும், ஆங்கிலரிடத்தும் போர்த்துக்கீசியரிடத்தும் பிரஞ்சுகாரரிடத்தும் அடிமைப்பட்டுச் சிதைந்த தமிழினம் இன்று வடநாட்டாரின் கிடுக்கிப் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. வடநாட்டானுக்குக் கண்காணியாரகளாக இருந்து பொறுக்கித்தின்னும் அடிமைத் தமிழர் ஒரு சிலரையும், மொழி, இன நலமற்றுத் தந்நல நெஞ்சினராக வாழும் கல்ருளித் தமிழர் ஒரு சிலரையும் தவிர மிகப் பெரும்பான்மைத் தமிழர் தாங்கள் தங்கள் அடிமைத் தளையினின்று மீள வகை தெரியாதவராக அல்லற்பட்டே கிடக்கின்றனர்.

ஆட்சி அதிகாரங்கள் முழுவதும் வடவனின் கைப்பிடியுள் சிக்கிக் கிடக்கின்றன. இங்குள்ள மாநில அரசினர் வெறும் குழுத் தலைவர்களே! அரசியல் செயலாளர்களே!

இங்குள்ள பெருந்தொழில்கள் யாவும் வடவரின் கையுள்! நிறைந்த வருமானங்கள் தரும் துறைகள் அவர்களுக்குச் சொந்தம். ஊர்க்குப் பெயர் வைப்பதானாலும் அவர்களைக் கேட்க வேண்டும்; உரிமைக்கு வாழ்த்துப் பாடுவதானாலும் அவர்கள் இசைவு தரவேண்டும்.

இங்குள்ள செல்வங்கள் ஏராளம்! நிலவளமும் மலைவளமும்