பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வேண்டும் விடுதலை

வெங்காளுர், காளிக் கோட்டம்(கல்கத்தா) முதலிய அயல் மாநிலங்களிலிருந்தும் தென்மொழியன்பர்களும் வீறு குறையாத விடுதலை மறவர்களும் திருச்சியில் வந்து கூடத் தொடங்கி விட்டனர். மாநாட்டு அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனாரும் மாநாட்டுச் செயலர் திரு. இறைக்குருவனாரும் 7-11-72 அன்று இரவே புறப்பட்டு 8-11-72 காலையிலிருந்து திருச்சியில் தங்கி, மாநாட்டு முன்னணிச் செயற்குழு உறுப்பினர்களாகிய திரு. வெற்றிக்கூத்தன், திரு. மகிழ்நன், திரு சின்னத்துரை, திரு தமிழநம்பி, திரு மு. வ. பரமசிவம், திரு. அருட்குவை, முதலியோருடன் மாநாட்டுத் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டனர். திரு. வெற்றிக்கூத்தன், திரு. மகிழ்நன் இருவரின் ஒத்துழைப்பையும் சொல்லில் வடிக்க முடியாது. இரவு பகலென்று பாராமல் இருவரும் ஓடி ஓடிச் செய்த பணிகள் எண்ணிலடங்கா தொண்டுகளின் அழுத்தத்தால் இருவரும் நான்கைந்து நாட்கள் சரிவர உணவுண்ணவோ உறங்கவோ முடியவில்லை. அவர்களுடன் அமைப்பாளர், செயலர் ஆகியோரும் அவர்களுடன் இருந்த பிற அன்பர்களும் வினைகளைப் பகிர்ந்து கொண்டு செய்த இணைவு முறையாலேயே மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த முடிந்தது. இறுதிவரை மாநாடு நடைபெற விருந்த தேவர் மன்ற இசைவும், ஊர்வலத்துக்கான பிற இசைவுகளும் தரப்பபடாமலேயே இருந்து அன்பர்களின் இடைவிடாத முயற்சிகளால் மாநாட்டிற்கு ஓரிரு நாட்களின் முன்னமேயே பெறப் பெற்றன. அப்பொழுதும் இயங்கி வழியாக ஒலிபரப்பும் இசைவுக்கு இறுதிவரை அரசினர் இசைவு தரவே இல்லை. குமுகாய மாநாடு நடக்க விருந்த 10-6-72 காரியன்று காலை தேவர் மன்றச் சுவர்களில் விடுதலை முழக்கங்கள் கொட்டை கொட்டையான எழுத்துகளில் சிவப்பு மையில் தாள்களில் எழுதி ஒட்டப்பெற்றிருந்தன. அவை போவோர் வருவோரைச் சற்று இடை நிறுத்திப் படிக்கத் தூண்டும் படி அவ்வளவு எடுப்பாக அமைந்திருந்தன. தேவர் மன்ற நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டப் பெற்று அழகுடன் காட்சியளித்தன.

ஊர்வலம் காலை 7 மணியளவில் தொடங்கும் என்று குறிக்கப் பெற்றிருந்தாலும், அன்பர்கள் நகர்ப்புறத்தின் பல பகுதிகளிலும் வந்து தங்கியிருந்ததனால் அவர்கள் வந்து கூடி ஊர்வலம் தொடங்க 8மணி ஆனது ஊர்வலத்தில் மறவர்கள் இருவர் இருவராக நின்றனர். ஊர்வலத்தின் இறுதியில் பெண்களும் அவர்களை யடுத்துத் தொண்டர்கள் சிலரும் கூடினர். மொத்தத்தில் ஊர்வலம்