பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

95

தொடங்குகையில் அதிலிருந்தவர் 150 பேர், ஊர்லம் பல வீதிகளிலும் சென்று கொண்டிருக்கையில் இடையிடையே பலர் வந்து கலந்து கொண்டனர். பெரும்பாலும் மாநாட்டுக்கு அழைக்கப் பெற்றிருந்த தலைவர்களுள் தமிழ்மறவர் திரு. வை. பொன்னம்பலனார் ஒருவரே ஊர்லத்தில் கலந்து கொண்டார். ஆனால் அன்றைய மாநாட்டில் கோவை மாவட்ட தி. க தலைவரும் வழக்கறிஞருமாகிய திரு. கசுத்தூரி அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றினார்.

உர்வலத்தில் கலந்து கொண்டவர் ஏறத்தாழ 200 பேராக இருந்தாலும், பலவகையான நடவடிக்கைகளும் இருக்கும் என்று தெரிந்தும், சட்டத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் என்ன நேர்ந்தாலும் எந்தமிழ் நாட்டிற்கென ஏற்றுக்கொள்வோம் எனத் துணிந்தும் வந்தவர்களாகவே அவர்களைக் கருதிக் கொள்ள வேண்டும். இதுபற்றி வேறு முன்பே தென்மொழியில் எச்சரிக்கை தரப் பெற்றுள்ளது. எனவே ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் ஒருவர் பதின்மருக்கு இன்னுஞ்சொன்னால் நூற்றுவருக்குக் கூடச் சமமாவர். அப்படிக் கணக்கிட்டால் ஊர்வலம் மிகுந்த அளவில் வெற்றி பெற்றது என்றே சொல்லுதல் வேண்டும்.

‘தமிழர் நாடு தமிழருக்கே 'தனித்தமிழ் நாட்டை அடைந்தே திருவோம்’ தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்” , அடிமைத் தமிழரே விடிந்தது எழுங்கள், பார்ப்பனப்புரட்டு பயனளிக்காது, விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள் போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கவும், தென்மொழியில் வெளிவந்த முழக்கங்கள் எழுதப்பெற்ற தட்டிகளையும் படங்களையும் ஏந்திக்கொண்டும் ஊர்வலம் திருச்சித் தேவர் மன்றத்திலிருந்து வடக்கு நோக்கிச் சரியாகக் காலை எட்டரை மணிக்குப் புறப்பட்டது. ஊர்வலத்தினர் அணி அணியாகப் பிரிந்து, தமிழ் குமுகாய, தமிழக விடுதலை முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பிய வண்ணம் சென்றனர். மறவர் இருவர் ஊர்வலத்தின் முன் ‘தமிழக விடுதலை மாநாடு’ என்று செம் மையில் எழுதப் பெற்ற பதாகையைப் பிடித்துச் சென்றனர். ஊர்வலத்தின் வலப்பக்கத்தில் மாநாட்டு அமைப்பாளரும் தென்மொழி ஆசிரியருமாகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், மாநாட்டுச் செயலரும் வலம்புரி ஆசிரியருமாகிய புலவர் இறைக்குருவனார் அவர்களும் அன்பர் சிலரும் அவ்வப்பொழுது வரிசையை ஒழுங்கு படுத்திக் கொண்டும், வேறு சில விரும்பத்தக்காத வன்முறைச் செயல்கள் நிகழ்ந்து விடாதவாறு கண்காணித்துக்