இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"இந்த கமலாவுக்குத்தான் என்ன முக்கோ போன ஜன்மத்துல மோப்ப சாயாப் பிறந்திருக்கணும்' என்று எண்ணிக் கொண்ட் பாகீரதி, "அதுவா? கிட்டப்பா தஞ்சாவூர்லேந்து கதம்பம், தாழம்பூல்லாம் வாங்கிண்டு வந்திருக்கார்' என்று சமாளித்தாள் பாகீரதி, - "அந்தக் கழைக்கூத்தாடிப்பெண் மஞ்சு என்ன ஆனா " என்று சந்தடிசாக்கில் கிட்டப்பாவின் காதைக் கடித்தான் • IT-سا-ا "அவளை அந்த சர்க்கஸ்காரன் விடறதா இல்லே! கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்' என்றார் கிட்டப்பா, 'பாவம், அந்தப் பெண் மூர்த்தி பேர்ல உசிரையே வெச்சிருந்தது' என்றான் கிட்டா. "நீ போய் வேலையைப் பாருடா. உனக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்' என்றார் கிட்டாவின் மாமா. - மறுநாள் விடியற்காலையிலேயே வைதிகச் சடங்குகளை ஆரம்பித்துவிடச் சொன்னார் கனபாடிகள். வீடு முழுதும்