'ஆபத்துக்குப் பொய் சொல்லலாம்னு சாஸ்திரமே சொல்றது. பசுமாட்டுக்குக் கொஞ்சம் புல் கொடுத்துட்டா பொய் சொன்ன பாவம் தீர்ந்துடுமாம். நம்மாத்துல பசுமாடும் இருக்கு. நிறையப் புல்லும் இருக்கு'என்றான் கிட்டா. 'பொய் சொல்ல யுேம் இருக்கே!' என்றாள் கமலா, இதற்குள் கனபாடிகள் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு மடியாகப் பூஜை மணையில் வந்து அமர்ந்தார். குத்து விளக்கும், வெண்கல மணியும் பஞ்சபாத்திரங்களும் தீக்கொழுந்துபோல் பளபளக்க, அர்ச்சனைக்குரிய புஷ்பங்கள் மூங்கில் தட்டில் குவிந்திருக்க, அந்த இடத்தில் ஒரு தெய்விக மணம் சூழ்ந்திருந்தது. திராட்சைப் பழங்களை நைவேத்தியமாகக் கொண்டு வைத்தாள் கமலா, 'ஏது திராட்சை!” என்று கனபாடிகள் கேட்க ஊர்லேர்ந்து கிட்டா கொண்டு வந்தான்'. - பூஜை முடித்து, 'ஆயதனவான்பவதி சொல்வி, தோட்டத் தில் காக்கைகளுக்கு அன்னமிட்டபின் சாவகாசமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார் கனபாடிகள். "மூர்த்தி எங்கடா போனான்ரி ஸ்நானத்துக்குப் போனவனா இன்னும் வரலை?" "அவன் வரமாட்டான்' என்றாள் கமலா. ஏன்?" "இனிமே வேதம் படிக்கப் போறதில்லையாம். திரும்பி வரப் போறதும் இல்லையாம்! யாரிட்டயும் சொல்லிக்காமலே போயிருக்கான்.' 'திடீர்னு வேதத்தின் பேர்ல அப்படி என்ன கோபம்? இதெல்லாம் யாரிடம் சொன்னான்' "கிட்டா, மூர்த்தியை தஞ்சாவூர்ல பார்த்தானாம்.' "கிட்டாவை இங்க கூப்பிடு.'
49
49