பக்கம்:வேமனர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமசாமி, காவல்லி வேங்கட்ட, (1765-1840) முதன் முதலாக ஆங்கிலத்தில் எழுதின இந்திய எழுத்தாளர்களின் குழுவைச் சேர்ந்த சவல்லி சகோதரர்களில் ஒருவர். இராமசாமி கல்கத்தா இலக்கியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் பண்டிதராகவும் பணியாற்றியவர். விஸ்வகுணதர்சம் அல்லது இம்மைப்பண்புகளின் கண்ணாடி என்ற நூல் வேங்கடாச்சாரி என்பவரால் எழுதப் பெற்ற வடமொழி நூலின் முதல் மொழி பெயர்ப்பு நூலாகும்; இதுவே இவரது முதல் நூலுமாகும். இது கி.பி. 1825-ல் அச்சிடப் பெற்றது. இவரது அடுத்த நூல் தக்கணக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு என்ற நூலாகும். இது கி.பி. 1829-ல் வெளியாயிற்று. இந்த இரண்டு நூல்களும் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த கல்கத்தாவின் மேலுயர் நீதி மன்ற முதன்மை நீதிபதி சர். எஃப். டபிள்யூ மாக்னட்டன் என்பாருக்கும் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு வில்லியம் பெண்டிங்கிக்கும், அவர்கள் இசைவுபெற்று அன்புக் காணிக்கையாகப் பெற்றதால், இவர், இவர் காலத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற புகழுடனும் மதிப்புடனும் திகழ்ந்திருக்க வேண்டும்.

இராமாநந்தர்: எஃப். இ. கீய் என்பார்க் கருத்துப்படி இராமாநந்தர் கி.பி. 1400 முதல் 1470 வரை உள்ள காலப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்; இவர் கருத்துப்படியே "ஒரே ஒரு கடவுள்தான் உண்டு; அவரைப் புலன்களால் அறிய முடியாது; அவர்தான் இராமர் என்பவர்; ஆனால் உருவ வழிபாடு பற்றியோ, இந்துக்களின் பல தெய்வக் குழுவைப் பற்றியோ, அல்லது பழைய புராணத் தொகுதி பற்றியோ அவரால் மறுக்கப்பெறவில்லை. இவருடைய ஆளுமையின் ஈர்ப்பால் இவரது சீடர்களுள் சூத்திரர், தீண்டத் தகாதவர், இஸ்லாமிய நெசவுக்காரர் (கபீர்) பெண்ணோருத்தி ஆகியோரும் இருந்தனர்.”

இராமாயணம்: இதன் நேர் பொருள் "இராமனின் அலைந்து திரிதல்" என்பது. இராமாயணம் இரண்டு இந்து இதிகாசங்களில் ஒன்று; மற்றோன்று மகாபாரதம். இராமனது நாடு கடத்தல் பற்றியும் அடுத்து அரசனகப் பட்டம் சூட்டிக் கொள்ளுதலைப்பற்றியும் கூறுவதுதான் இதன் கரு அமைப்பாகும் (Theme). வடமொழியில் சிறந்த கவிஞராகிய வால்மீகி என்பவரால் இயற்றப் பெற்றது. நூலின் காலம் இன்னும் வரையறுக்கப் பெறவில்லை; ஆயினும் வின்டர்னிட்ஸ் என்பார் "இராமாயணத்தின் முக்கிய பகுதி

7

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/108&oldid=1256276" இலிருந்து மீள்விக்கப்பட்டது