பக்கம்:வேமனர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வால்மீகியால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும்; அதன் பிறகு பிறர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் பாடல்களைச் சேர்த்துக் கொண்டே போயிருத்தல் வேண்டும்" என்று கூறுவர்.

இராயர் சீமை: குன்றுகள் அடங்கிய ஆந்திரத்தின் உட்பகுதி. இதில் சித்தூர், கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் என்ற நான்கு மாவட்டங்களும் அடங்கும். அடிக்கடி இப்பகுதியில் வறட்சி தோன்றுவதுண்டு.

இராய்தாலர்: சக்கிலி இனத்தைச் சேர்ந்தவராயினும் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் மிகவும் வணக்கத்திற்குரியவராக வாழ்ந்த கவிஞரும் ஞானியும் ஆவார். சிட்டோடாவின் இளவரசியான ஜாலி என்பவர் இவரது பல சீடர்களில் ஒருவர்.

இரால்லப்பள்ளி அருந்த கிருஷ்ண சர்மா: தெலுங்கு, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், பாலி மொழிகளில் வல்லுநரான இவர் ஒரு தலைசிறந்த இசை அறிஞராகவும் திகழ்பவர். சமூக சமயக் கொள்கைகளில் இவர் வைதிகப் போக்குடையவராயினும், சகிப்புத்தன்மையற்றவர் அல்லர்: தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதுபவர். வேமனரைப் பற்றி ஆந்திரப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளை ஆற்றியவர். பாலி மொழியிலிருந்து கீதா-சப்தஸ்தி என்ற நூலைத் தெலுங்கில் மொழி பெயர்த்தவர். நல்ல இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியவர். கி.பி. 1893-ல் பிறந்த இவர் மைசூர் மகாராசர் கல்லூரியில் கி.பி. 1912 முதல் 1949 வரையில் தெலுங்கு விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இப்பொழுது தன் மக்களுடன் பெங்களூரிலும் திருப்பதியிலுமாக வாழ்கின்றார்.

இராஜமகேந்திரபுரம்" ஆங்கிலத்தில் 'இராஜமந்திரி' என வழங்குகிறது. இந்நகர் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முதலாம் அம்மராஜு வாலோ (கி.பி. 921-945) அல்லது இரண்டாம் அம்மராஜு வாலோ (கி.பி. 945-970) நிறுவப்பெற்ற இந்நகர் கீழைச் சாளுக்கியர்களின் தலைநகராக இருந்தது. பிற்காலத்தில் கொண்டவீட்டைச் சார்ந்த ரெட்டி அரசர்களின் ஒரு கிளையினருக்குத் தலைநகராகவும் திகழ்ந்தது. நன்னயர், விரேச்லிங்கம் ஆகியோரின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால் ஆந்திர இலக்கிய வரலாற்றில் இஃது ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/109&oldid=1256278" இலிருந்து மீள்விக்கப்பட்டது