பக்கம்:வேமனர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனகொண்டா:(சரியாக உச்சரித்தால் இது வினு கொண்டா என்பது): இந்த நகரமும் இதன் கோட்டையும் ஆந்திர வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளன. இஃது இப்பொழுது குண்டூர் மாவட்டத்திலுள்ளன; இதே பெயரில் இஃது ஒரு வட்டத்தின் தலைமையான இடமாகத் திகழ்கின்றது.

உபநிடதங்கள்:இருநூறுக்கு மேற்பட்ட இப்பெயர் கொண்ட நூல்கள் தத்துவ உரையாடல்களை நுவல்பவை; பெரியவையும் சிறியவையுமான இவை சிறப்பினலும் பெயர்பெற்றவை. இவற்றுள் சில யாப்பு வடிவத்திலும், சில உரைநடையிலும் காணப் பெறுகின்றன. இவற்றின் காலம் புத்தர் காலத்திற்கு முன்னுள்ள காலம் முதல் இக்காலம் வரையிலும் உள்ள காலம் என்பதாக வரையறுக்கப்பெறுகின்றது. அல்லா உப நிடதமும் கிறித்து உபநிடதமும் இன்று உள்ளன. இது போன்று ஒன்றுபடுத்தப்பெற்ற அல்லது வரையறுக்கப் பெற்ற உபநிடதத் தத்துவம் போன்று வேறு ஒரு நூலும் இல்லை என்று சொல்லலாம். டாக்டர் எஸ். இராதாகிருட்டி ணன் கூறுவது: உபநிடதங்களின் நோக்கம் தத்துவ உண்மைகளை மட்டிலும் அடைவதில் இல்லை. . . . ஒன்றுக்கொன்று பொருந்தாதவையும் அறிவியல் முறைக்குப் பொருந்தாதவையும் அவற்றிலுள்ளன. ஏ.பீ. கீத் என்பார் மேலும் தெளிவாக உரைப்பார். அவர் கூறுவது: (உபநிடதங்களின்) கொள்கைகள் வரலாற்றுக் கவர்ச்சிகளைக் கொண்டவை; தத்துவ நோக்கில் இவை சிறிது கூட எண்ணுவதற்குத் தகுதியுடையன அல்ல."

ஊர்வசி:உம்பருலகத்து ஆடலணங்கு. இவளுடைய கண்கவர் வனப்பு குறித்து எழுந்த கட்டுக்கதைகள் ஒரு சிறந்த நாடகத்தை எழுதுவதற்குக் காளிதாசரையும், ஒரு சிறந்த கவிதையைப் படைப்பதற்கு இரவீந்திரநாத தாகூரையும் ஊக்குவித்தன. இவள் வசிட்டர், அகத்தியர் இவர்களுடைய அன்னையாகக் கருதப்பெறுகின்றாள்.

எர்ரப்பிரகடா, எடப்பிடி(கி.பி. 1280-1350):புரோலயா வேமாரெட்டியின் அரண்மனையில் பெரும்புகழுடன் திகழ்ந்த ஒரு பெருங் கவிஞர். இவர் நன்னயர் குறையாக விட்டதும், திக்கனர் தொடாததுமான மகாபாரதத்தின் மூன்றாவது பருவத்தை இவர் மொழி பெயர்த்துத் தலைக்கட்டியவர். இந்த இடைவெளியை நிரப்புவதற்கு மிகத் திறமையுடன் சமாளித்துள்ளார். இவர் இவ்வாறு தொடங்குகிறார்:

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/111&oldid=1256281" இலிருந்து மீள்விக்கப்பட்டது