பக்கம்:வேமனர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களில் வல்லுநரான இவர் இந்திய மொழி மதிப்பீட்டு அமைப்பின் (Linguistic Survey of India) தலைவராக நியமனம் பெற்றார், இப் பொறுப்பில் இவர் பெரும் புகழுடன் சேவை புரிந்தார்.

கிருஷ்ணன்: வசுதேவரின் மைந்தன், யாதவ குலத்தின் தலைவன். மகாபாரதத்தில் இவன் அரசியல்-தத்துவ வல்லுனனாகப் புகழ் பெற்றுச் சிறந்து திகழ்ந்தவன். பகவத் கீதையின் ஆசிரியன். இராமனுக்கு நிகராக இவனும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப் பெற்று இந்துக்களால் வழிபடப் பெறுகிறான். இந்துக்களின் கடவுளர்களனைவரிலும் பகட்டான தோற்றமும் மிக்க எழுச்சியும், புனைவியல் திறமும் கொண்டு மிகச் சிறப்பாகத் திகழ்கின்றான். கருநீல வண்ணமுடைய இவன் மஞ்சள் நிற ஆடையையணிந்து, குழலூதி ஆயிரக் கணக்கான இளம் பெண்களின் இதயத்தைக் கவர்ந்தவன்.

குண்டூர்: ஆந்திரத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகர் மாவட்டமும் இப் பெயர் கொண்டது.

குரு: ஆசிரியர்; அறிவு புகட்டுபவர். சில சந்தர்ப்பங்களில் இச்சொல் தலைவர் என்ற பொருளிலும் வழங்கி வருகின்றது. 'தொங்கல குரு' (கொள்ளைக்காரர்களின் தலைவன்) என்ற தெலுங்குச் சொற்றொடரில் கொள்ளைக்காரர்களின் தலைவன் என்ற பொருளைக் காணலாம்.

குறள்: தமிழர்களின் தலைசிறந்த நீதி இலக்கியம். தமிழர்களால் 'மறை' எனப் போற்றப்படுவது. நீதி மொழிகளடங்கிய இந்நூல் மூன்று பகுதிகளையுடையது. முதற்பகுதியில் அறமும், இரண்டாம் பகுதியில் பொருளும் (அரசியல் பற்றியது) மூன்றாம் பகுதியில் காதலும் துவலப் பெறுகின்றன. 1330 குறட்பாக்களையுடைய இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.

கொண்டவீடு: ஒரு நகர், கோட்டை, நிலப்பகுதி இவற்றின் பெயர். அனவோத்த வேமாரெட்டி (கி.பி. 1353-1364) என்ற அரசர், இவருக்குப் பின் வந்தவர்கள் இவர்களின் தலைநகர். இடைக்கால ஆந்திர வரலாற்றில் இது பெரும் பங்கு கொண்டது.

கோதாவரி: இந்தியத் துணைக் கண்டத்தில் மிகப் பெரிய ஆறு; 1498 கி.மீ. நீளமுடையது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கின்றது. இதன் நீளத்தில் கிட்டத்தட்டப் பாதி (720 கி.மீ.) ஆந்திர மாநிலத்தில் பாய்ந்து செல்லுகின்றது.

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/114&oldid=1282645" இலிருந்து மீள்விக்கப்பட்டது