பக்கம்:வேமனர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதன் கரையில் உள்ள மிக முக்கியமான நகர் இராஜ மகேந்திரபுரம் (இராஜமந்திரி).

சங்கரர்: ஈடு எடுப்பற்ற சிந்தனையாளர். எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவராகலாம். அத்வைத வேதாந்தம் என்ற தத்துவத்தை விளக்கியவர். இவரால் நிறுவப் பெற்ற சமய மையங்களின் தலைவர்கள் "சங்கராச்சாரியர்கள்" என்று வழங்கப் பெறுகின்றனர். இப்பொழுது ஐந்து பெரிய சங்கராச்சாரியர்களைத் தவிர வேறு சில சிறிய சங்கராச்சாரியர்களும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக முதல் சங்கராச்சாரியர் "ஆதி சங்கரர்" என்று குறிப்பிடப் பெறுகின்றார்.

சதகம்: தனித்தனியாக முடிவு பெறும் நூறு பாடல்கள்; இவை ஒரே யாப்பில் பாடப் பெறுபவை. "சதகத்தின்" சிறப்பியல்பு மகுடம் அல்லது பல்லவி போன்றதைக் கொண்டிருப்பதாகும்; பாடலின் இறுதிச் சொல் (அல்லது அடி) ஒருவரின் பெயர் அல்லது இதற்கு முன்னருள்ள அடிகளில் பேசப்பெற்ற தெய்வத்தின் பெயர் கொண்டிருக்கும். மகுடம், கையாளப்படும் யாப்பை அறுதியிடுகின்றது. ஆகவே இது பாடலின் அமைப்பிற்கு வடிவம் நல்குகின்றது.

சக்தநூல்: கர்நூலின் பழைய பெயர்.

சர்க்கார், பினாய்குமார் (கி.பி. 1887-1949): வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் மிகுதியாகவும் சிறப்பாகவும் எழுதிக் குவித்த திறமை மிக்க வித்தகர். ஒரு சிறந்த பொருளியல் அறிஞர் என்றும், சமூக இயல் வல்லுநர் என்றும் உலகப் புகழைப் பெற்றவர். பல மொழிகளில் பெயர்க்கப்பெற்ற இவரது நூல்கள் பல நாடுகளின் கல்விக்குறியனவும் பிற வற்றிற்குரியனவுமான நற்பெயர்களை அவருக்கு நல்கின.

சர்வக்ஞர்: இவருடைய உண்மையான பெயர் "புஷ்ப தத்தர்" என்பது; ஒரு சூத்திரக் கைம்பெண்ணுக்கும் ஒரு பிராமணனுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருடைய படிப்பினைகள் கிட்டத்தட்ட வேமனருடையவைபோல் உள்ளன. இ.பி.ரைஸ் என்பார் இவர் கிட்டதட்ட கி.பி. 1600-ல் வாழ்ந்தவராகக் கருதுகின்றார்; ஆனால் ஒருவரும் இவருடைய காலத்தைப்பற்றி வரையறுத்திலர்.

சிரீசைலம்: இந்தியாவின் ஒரு சிறந்த யாத்திரீகத் தலம். சிவனை வழிபடுவோர் மிகச் சிறந்த தெய்விகமாக பன்னிரண்டு இலிங்கங்களுள் ஒன்று இங்கு இருப்பதாக நம்புகின்றனர்: மராட்டியப் பேரரசர் சிவாஜி இப் புனிதத் தலத்திற்கு வந்து

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/115&oldid=1256287" இலிருந்து மீள்விக்கப்பட்டது