பக்கம்:வேமனர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுதிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முனிவரால் எழுதப் பெற்றதாகக் கருதப்பெறுகின்றது. சாதியின் படிமரபினையும் படிமரபின் மேல் எல்லையில் இருப்பவர்களின் உரிமைகளையும் காப்பதையே அச்சட்டத் தொகுதி மிகவும் முக்கியமாக வற்புறுத்துகின்றது. கிட்டத்தட்ட ஐம்பது சட்டங்களில் மனு, யக்ஞவாக்கியர், பராசரர், கௌதமர், ஆபஸ்தம்பர் ஆகியோர் எழுதிய சில சட்டங்கள் பெரியவையாகும்.

தமிழ்நாடு: ஆந்திரத்திற்கு நேர்த் தெற்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி. இது கன்னியாகுமரி வரையிலும் நீண்டுள்ளது. சென்னை மாநிலம் என்ற பழைய பெயர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று மாற்றப் பெற்றது. தெற்கத்திய மாநிலங்களில் மிகவும் முன்னேற்ற டைந்த மாநிலம். ஆந்திரத்தை விடச் சிறிதான இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 336,86,953 (1961-மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி).

தாகூர், இரவீந்தரநாத (கி.பி. 1861-1941): காளிதாசர், பவபூதி இவர்கட்குப் பின்னர் இந்தியாவில் தோன்றிய மிகப் பெருங்கவிஞர். 1913-ல் இலக்கியத்திற்கு நோபெல் பரிசு பெற்றவர்.

தாது (கி.பி. 1554-1603): ஒரு சிறந்த கவிஞர்; திருத்தொண்டர். தம்பெயரில் ஒரு வழிபாட்டு முறையை நிறுவியவர்: ஆமதாபாத் இவர் பிறப்பிடம்: ஆனால் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை இராஜஸ்தான் மாநிலத்தில் கழித்தவர்.

திக்கனர்: கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்: அரசியல் வல்லுநர். தெலுங்குக் கவிஞர்களுள் மிகப் பெரிய கவிஞர்; இவர் "கவிப் பிரமன்" (கவிஞர்களுள் முதன்மையானவர்). நான்காவது பர்வம் தொடங்கி எஞ்சிய மகாபாரதம் முழுவதையும் தெலுங்கில் மொழி பெயர்த்தவர். தத்துவஞானியாக இல்லாத ஒர் அரசியல் வல்லுநராக இருந்தபடியால் அந்தப் பெருங்காப்பியத்தில் பகவத் கீதைப் பகுதியை மொழி பெயர்க்காது விட்டார். அரசியல் சூழ்ச்சியைப்பற்றியும் போர் முறைபற்றியும் அக் காவியத்தில் துவலும் பகுதிகளைத் தெலுங்கில் மொழி பெயர்த்துச் சிறப்பெய்தியவர். தம்முடைய அரசப் புரவலராகிய மனுமசித்தியின் அரசு அண்மை நாட்டு அரசரால் கைப்பற்றப் பெற்ற பொழுது, வாரங்கல் அரசர் கணபதி தேவரின் துணையை நாடி, சேனையைக் கொணர்ந்து கைப்பற்றியவரைத் துரத்தி அடித்தவர்.

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/118&oldid=1256291" இலிருந்து மீள்விக்கப்பட்டது