பக்கம்:வேமனர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர்: சமணராயினும் அல்லராயினும் குறளாசிரியர் உறுதியாகத் தாழ்ந்த வகுப்பினரைச் சார்ந்தவரே. உண்மையில் இவருக்கு வழங்கும் பெயர் (இது அவருடைய உண்மையான பெயரன்று) "வள்ளுவர் வகுப்பைச் சார்ந்த ஒரு திருத்தொண்டர்" என்று பொருள்படுகின்றது; வள்ளுவர்கள் உயர் சாதி மக்களன்று. இவருடைய காலமும் இன்னும் சரியாக அறுதியிடப் பெறவில்லை; பல்வேறு ஆய்வாளர்கள் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலப் பகுதிகளை இவர் வாழ்ந்த காலமாகக் கருதுகின்றனர்.

துக்கராம் (கி.பி. 1598-1649): மராட்டிய நாட்டின் கவிஞர்; திருத் தொண்டர். இவர் ஒரு சிறு வணிகர்; ஆயினும் இவர் மராட்டிய மன்னர் சிவாஜி அனுப்பிய நன்கொடைகளை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்; இவர் வளமான எழுத்தாளர்; 4,600 பாசுரங்களை இயற்றியுள்ளார்.

தெலிங்கானா: கிட்டத்தட்ட பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் தெலுங்கு நிலப் பகுதி (ஆந்திரம்) முழுவதையும் "தெலிங்கானா” என வழங்கி வந்தனர். இப்பொழுது இச்சொல் சிறிது மாற்றப்பட்ட நிலையில் (தெலங்கானா) ஒன்பது தெலுங்கு மாவட்டங்கள் அடங்கிய பகுதியைக் குறிக்கின்றது. இந்த ஒன்பது தெலுங்கு மாவட்டங்களும் அடங்கிய பழைய ஐதராபாத் மாநிலத்துடன் அடங்கி இருந்தன. இவை இப்பொழுது ஆந்திரத்துடன் இணைக்கப்பெற்று விட்டன.

தெலுங்கு: 'ஆந்திரத்'தைக் குறிக்கும் இதே பொருளுடைய மற்றொரு சொல்; 'ஆந்திரம்' என்னும் சொல்லைப் போலவே, இதுவும் மக்களையும் குறிக்கும்; நிலப் பகுதியையும் குறிக்கும். வரலாற்றாசிரியர்கள் இன்னும் தெலுங்கர்களும் ஆந்திரர்களும் முதன் முதலாக ஒரே வகுப்பினரா அல்லது இரண்டு வெவ்வேறு வகுப்பு மக்களா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையிலுள்ளனர்.

தேவதாசி: இச் சொற்றொடரின் நேர்ப்பொருள் ஒரு பெண் அடிமை அல்லது கடவுளர்களின் வேலையாள் என்பது. இவளது கடமை திருக்கோயிலில் டாடுவதும் ஆடுவதுமாகும். இச் செயலுக்கென்றே இவள் உரிமையாக்கப் பெற்றவள். இவளுடைய வாழ்க்கைத் தேவைகளுக்காக வரியற்ற நிலம் விடப் பெற்றிருந்தது; ஆனால் பொதுவாக எல்லோருமறிந்த விபசாாம் இவளுடைய வருமானத்தின் குறையை நிரப்பும்

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/119&oldid=1256292" இலிருந்து மீள்விக்கப்பட்டது